Wednesday, 3rd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

விஐபி வரிசையில் அதிகாரிகள் குடும்பத்தால் மீண்டும் தள்ளுமுள்ளு

ஜுலை 27, 2019 01:05

காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தில், அத்திவரதர் தரிசன வைபவத்தில் இன்றும் விஐபி தரிசன வரிசையில், தள்ளு முள்ளு மற்றும் வாக்குவாதம் ஏற்பட்டது. 27ஆவது நாளான இன்று, அத்திவரதர் நீல வண்ண பட்டாடையில், துளசி கதம்ப மாலை அணிந்து பக்தர்களுக்கு காட்சி அளித்து வருகிறார். இன்று சனிக்கிழமை என்பதால், பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது.

அதிகாலை தொடங்கி காலை 11 மணிவரை 7 தரிசன வரிசையில், 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வழிபட்டுள்ளனர்.

இதற்கிடையே நேற்றைய தினம் விஐபி வரிசையில், தள்ளுமுள்ளு நிலவியது போல், இன்றும் போலீஸ் அதிகாரிகளின் குடும்பத்தினர், அனுமதி சீட்டு இல்லாமல் அனுமதிக்கப்படுவதாக கூறி, பக்தர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் போலீசாருடன் கடும் வாக்குவாதம் மற்றும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

இதையடுத்து, உரிய பாஸ் வைத்திருந்தவர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டதுடன், அதனை கண்காணிக்க கூடுதலாக போலீசார் நிறுத்தப்பட்டுள்ளனர். மாலை 6 மணிக்கு மேல் ரூ 300 கட்டணத்தில் ஆன் லைனில் முன் பதிவு செய்தவர்கள் தரிசனம் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தலைப்புச்செய்திகள்