Sunday, 30th June 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

இரு குழந்தைகளையும் குளத்தில் வீசிக் கொன்றுவிட்டு தாயும் தற்கொலை

ஜுலை 28, 2019 04:52

மயிலாடுதுறை: மயிலாடுதுறை தரங்கம்பாடி தாலுகா உத்திரங்குடி கிராமத்தைச் சேர்ந்தவர்கள் ரமேஷ் - சுரேஷ் இரட்டையர்கள், இவர்களில் மூத்தவர் ரமேஷ். சென்னையில் சமையற்கலைஞராக பணிபுரிகிறார், உத்திரங்குடியில் அவரது மனைவி தேவி, 8 வயது மகள் ஜனனி, 3 வயது மகன் ஜெயமித்திரன் ஆகியோரும், இரட்டையர்களின் தாய் மல்லிகா, மற்றும் இளைய சகோதரர் சுரேஷ் ஆகியோர் ஒரே வீட்டில் வசிக்கின்றனர்.

இந்நிலையில் வெள்ளிக்கிழமை இரவு 10 மணியளவில் குடும்பத்தினருடன் சமைத்து சாப்பிட்டு குழந்தைகளுடன் துாங்கியுள்ளார் தேவி. இரவு 11 மணியளவில் மல்லிகா விழித்து பார்த்த போது, தேவியையும் அவரது குழந்தைகளையும் காணவில்லை. விடிய விடிய ஊர் முழுவதும் தேடியும் அவர்கள் கிடைக்கவில்லை.

இந்நிலையில், சனிக்கிழமை அதிகாலை கிராமத்தில் உள்ள குட்டைக்கு மக்கள் சென்றபோது அங்கு ஒரு மரத்தில் தேவி துாக்கிட்டுத் தொங்கிய நிலையில் கிடந்துள்ளார். குட்டையில் இரு குழந்தைகளின் சடலங்களும் மிதந்துள்ளன

பொறையார் போலீசார் சம்பவ இடத்த்திற்கு விரைந்து சென்று, சடலங்களை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் குடும்பத் தகராறு தான் காரணமாக இருக்கலாம் என்று தெரியவந்துள்ளது 

உடற்கூறாய்வுக்குப் பின் சடலங்கள், ரமேஷின் குடும்பத்தாரிடம் ஒப்படைக்கப்பட்டன. குடும்பப் பிரச்னையில் பெண் ஒருவர் தனது குழந்தைகளை கொலை செய்து விட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது

தலைப்புச்செய்திகள்