Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

சொத்துக்களை பறிமுதல் செய்யக் கூடாது: விஜய் மல்லை‌யா

ஜுலை 28, 2019 08:44

புதுடெல்லி: தன்னுடைய சொத்துக்கள் மற்றும் உறவினர்க‌ளின் சொத்துக்களை பறிமுதல் செய்ய இடைக்கால‌த் தடைக் கோரி, தொழிலதிபர் விஜய் மல்லையா ‌உச்ச நீதிம‌ன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.

சுமார் 9 ஆயிரம் கோடி ரூபாய் வங்கிக் கடன் ஏய்ப்பு வழக்கில் சிக்கியுள்ள தொழிலதிபர் மல்லையா தற்போது இங்கி‌லாந்தில் தஞ்ச‌ம் அடைந்துள்ளார். அவரை இந்தியா கொண்டு வரும் நடவடிக்கைகளை அரசு எடுத்து வருகிறது. இந்தியாவில் பெரிய அளவில் நிதி மோசடிகள் புரிந்துவிட்டு‌ வெளிநாடு ‌த‌ப்பிச் செல்லும் போக்கிற்கு முற்றுப்புள்ளி வை‌க்கும் வகையில், பொருளாதார குற்றவாளிகள் தப்பிப்பு தடுப்பு சட்டத்தை மத்தி‌ய அரசு க‌டந்தாண்டு கொண்டு வந்தது. அந்தச் சட்டத்தின்‌ கீழ் குற்றவாளி என அறிவிக்க‌ப்பட்ட ‌தொழிலதிபர் விஜய் மல்லையாவின் மீது நடவடிக்கைகள்‌ தீவிரமடைந்துள்ளது.

இந்நிலையில் இதுதொடர்பா‌ன வழக்கு, சட்டவிரோத பணப்பரிவர்த்தனை தடுப்புச் சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. மேலும், மல்லையாவை நாடு கடத்தக் கோரும் வழக்கு இங்கிலாந்‌தில் நடைபெற்று வ‌ருகிறது. இந்நிலையில் நிதி மோசடி குற்றச்சாட்டுக்கு உள்ளாகியிருக்கும் கிங் பிஷர் நிறுவனத்துக்குச் சொந்தமான சொத்துகளை தவிர, வேறு எந்‌த சொத்தையும் பறிப்பதற்கு இடைக்காலத் தடைக்கோரி மல்லையா உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளார். 

தலைப்புச்செய்திகள்