Friday, 28th June 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

மாற்றுகட்சியினர் 300 பேர் அதிமுகவில் சேர்ந்தனர்

ஜுலை 28, 2019 12:42

வேலுார் ; திமுக மற்றும் காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு கட்சிகளில் இருந்து 300 பேர் விலகி, முதல்வர் பழனிச்சாமி முன்னிலையில் அதிமுகவில் இணைந்தனர். முதலமைச்சர் பழனிச்சாமி, வேலுார் லோக்சபா தொகுதி வேட்பாளர் ஏ.சி.சண்முகத்தை ஆதரித்து வேலுார் தொகுதியில் பிரசாரம் செய்து வருகிறார். 

இன்று(ஜூலை 28) வேலுாரில் உள்ள தனியார் விடுதியில் தங்கிருந்த எடப்பாடி பழனிச்சாமி முன்னிலையில், காங்கிரஸ் மாவட்ட துணைத்தலைவர் பையாஸ் அகமது மற்றும் வேலுார் திமுக எம்.எல்.ஏ., தம்பி கார்த்தி மற்றும் உறவினர் ராஜா ஆகியோரும் அதிமுகவில் இணைந்தனர்.

தலைப்புச்செய்திகள்