Monday, 1st July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

இளையராஜாவுக்கு கவுரவ டாக்டர் பட்டம்

ஜுலை 28, 2019 01:00

ஆந்திரா:ஆயிரம் படங்களுக்கு மேல் இசையமைத்து சாதனை படைத்ததற்காக, ஆந்திராவில் இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது. 

ஆந்திர மாநிலம் குண்டூர் மாவட்டத்துக்குட்பட்ட வொட்லமுடி பகுதியில், விஞ்ஞான் பல்கலைக்கழகம் செயல்பட்டு வருகிறது. இதன் 7வது பட்டமளிப்பு விழா நேற்று நடைபெற்றது. விழாவில் இளையராஜா உட்பட மூன்று பேருக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது. 

விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற ஹைதராபாத் மத்திய பல்கலைகழக முன்னாள் துணை வேந்தர் டாக்டர் ஹரி நாராயணா, இளையராஜாவுக்கு கவுரவ டாக்டர் பட்டத்தை வழங்கி சிறப்பித்தார். 

தலைப்புச்செய்திகள்