Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

பொறியியல் கலந்தாய்வு நிறைவு: 90,737 இடங்கள் காலி

ஜுலை 29, 2019 12:39


சென்னை: பொறியியல் படிப்புகளுக்கான நான்காம் கட்ட கலந்தாய்வு முடிவடைந்துள்ள நிலையில், 16 கல்லூரிகளில் ஒரு மாணவர்கூட சேரவில்லை என்பது, தெரியவந்துள்ளது. 

தமிழகம் முழுவதும் உள்ள 479 பொறியியல் கல்லூரிகளில், பி.இ மற்றும் பி.டெக் பொறியியல் பட்ட மேற்படிப்புகளுக்கு, சுமார் 1 லட்சத்து 72 ஆயிரத்து 940 இடங்கள் உள்ளன.  இதற்கான கலந்தாய்வு கடந்த 3ம் தேதி துவங்கி நான்கு கட்டங்களாக நடைபெற்றது. 

இதில், இதுவரை 76 ஆயிரத்து 364 இடங்கள் மட்டுமே நிரம்பியுள்ளன. மொத்தம் உள்ள 479 கல்லூரிகளில், இதுவரை 13 கல்லூரிகளில் மட்டுமே 100 சதவீத மாணவர் சேர்க்கை நடைபெற்றுள்ளது. 85 கல்லூரிகளில் 10 சதவீதத்துக்கும் குறைவாகவே மாணவர்கள் சேர்ந்துள்ளனர். அதிலும் குறிப்பாக, 16 பொறியியல் கல்லூரிகளில் ஒரு மாணவர் கூட சேரவில்லை.

இதனால், சுமார் 90 ஆயிரத்து, 737 அரசு ஒதுக்கீடு இடங்கள் காலியாக உள்ளன. இதன்மூலம், பொறியியல் படிப்புகள் மீதான மாணவர்களின் ஆர்வம் குறைந்து வருவது தெரிய வருவதாக கல்வியாளர்கள் தெரிவித்துள்ளனர். 

தலைப்புச்செய்திகள்