Monday, 24th June 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

காபிடே நிறுவனர் மாயம்: கடன் தொல்லையா?

ஜுலை 30, 2019 03:04

பெங்களூரு: பிரபல கபே காபிடே நிறுவனர் சித்தார்த் மாயமானதால் அவர்களது குடும்பத்தினர் கலக்கம் அடைந்துள்ளனர். இவர் முன்னாள் மத்திய அமைச்சரான எஸ்.எம்.கிருஷ்ணாவின் மருமகனும் ஆவார்.

கர்நாடக மாநிலத்தின் முன்னாள் முதல்வர் மற்றும் கவர்னராக இருந்தவர் எஸ்.எம்.கிருஷ்ணா. இவரது மகள் மாளவிகாவின் கணவர் சித்தார்த். இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். சித்தார்த் கபே காபிடே என்ற காபி தூள் நிறுவனம் நடத்தி வந்தார். உலகம் முழுவதும் ஏற்றுமதி செய்யப்படும் இந்நிறுவனம் மிக பிரசித்தி பெற்றதாகும்.

இதனை நடத்தி வந்த சித்தார்த் தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. பல்வேறு கம்பெனிகள் நடத்தும் இவரது நிறுவனங்களில் இந்தியாவில் சுமார் பத்தாயிரம் பேர் பணியாற்றுகின்றனர். சமீபத்தில் மின்ட்ரி என்ற நிறுவனத்தை 3 ஆயிரம் கோடிக்கு விற்றுள்ளார். மேலும் காபிடே நிறுவனத்தையும் கோகோ கோலா நிறுவனத்திடம் விற்க பேச்சு நடத்தி வந்ததாகவும் கூறப்படுகிறது. சித்தார்த் சமீப காலமாக நஷ்டத்தை சந்தித்ததாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில் நேற்று காரில் சென்ற அவர் பெங்களூரில் இருந்து 375 கி.மீட்டர் தொலைவில் உள்ள நேத்ரா நதி அருகே சென்றுள்ளார். பின்னர் காரில் இருந்து இறங்கி சென்ற அவர் திரும்பிவில்லை . இதனால் திடுக்கிட்ட டிரைவர் பல இடங்களில் தேடி உள்ளார். ஆனால் சித்தார்த்தை காணவில்லை.

இதனையடுத்து போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் மற்றும் தீயணைப்பு படையினர் ஆற்றில் தேடி வருகின்றனர். இந்த செய்தியால் எஸ்எம் கிருஷ்ணா வீட்டின் முன்பு அவரது ஆதரவாளர்கள் குவிந்துள்ளனர்.

தலைப்புச்செய்திகள்