Sunday, 7th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

ஆந்திராவில் கல்வி வியாபாரமாகாது: கட்டணத்தை முறைப்படுத்த ஆந்திர சட்டசபையில் மசோதா

ஜுலை 30, 2019 12:46

ஆந்திரா: பள்ளி மற்றும் உயர் கல்வியை ஒழுங்குபடுத்தும் மசோதாவை ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி  நேற்று அம்மாநில சட்டமன்றத்தில் தாக்கல் செய்துள்ளார்.

தனியார் பள்ளிகளின் கட்டணத்தை முறைப்படுத்தல், கல்வியின் தரத்தை அதிகரித்தல் போன்றவை இந்த மசோதாவின் முக்கிய அம்சமாக உள்ளது. இதற்காக இரண்டு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. அந்த குழுக்கள் பள்ளிகளின் நிலை, கல்வியின் தரம் மற்றும் மாணவர்களின் செயல்களைக் கண்காணிக்கும்.

ஆந்திராவின் கல்வி ஒழுங்குபடுத்தும் ஆணையத்தின் தலைவராக முன்னாள் நீதிபதி நியமிக்கப்பட்டுள்ளார். சட்டமன்றத்தில் பேசிய முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி, நம் சட்டமன்றத்தில் அமர்ந்துள்ள பல அமைச்சர்கள் சொந்தமாக பள்ளி, கல்லூரிகள் வைத்துள்ளனர். 

அவற்றில் எல்.கே.ஜி, யூகே.ஜி வகுப்புகளுக்குக் கூட லட்சக்கணக்கில் பணம் வசூலிக்கப்படுகிறது. இனி ஆந்திராவில் கல்வி வியாபாரமாகாது. அதைத் தடுக்கவே இந்த மசோதா கொண்டு வரப்பட்டுள்ளது” என தெரிவித்துள்ளார்.
 

தலைப்புச்செய்திகள்