Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

டாக்டர் முத்து லட்சுமி ரெட்டி பிறந்தநாள் மருத்துவர்கள் தினமாக கொண்டாடப்பட்டது

ஜுலை 31, 2019 09:27

செங்கம்: திருவண்ணாமலை மாவட்டம் போளூர் அடுத்த களம்பூரில் மேம்படுத்த பட்ட ஆரம்ப சுகாதார நிலையத்தில் டாக்டர் முத்து லட்சுமி ரெட்டியின் பிறந்தநாளை மருத்துவர்கள் தினமாக கொண்டாடப்பட்டது. 

களம்பூர் வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் சுந்தர் தலைமையில் நடைபெற்ற மருத்துவ தினவிழாவில் கர்ப்பிணி பெண்களுக்கு வளைகாப்பு நடைபெற்றது.  அதனைதொடர்ந்து  இரண்டு பெண் குழந்தைகள் பெற்ற தாய் குடும்பகட்டுபாடு அறுவைசிகிச்சை செய்து கொண்ட பெண்ணுக்கு மருத்துவர்கள் நினைவு பிரிசுவழங்கினார்கள்.

மருத்துவ தினவிழாவில் போளூர் வாட்டார மருத்துவர்கள்  ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர்கள் வட்டார மேற்பார்வையாளர்கள் கிராம செவிலியர்கள்  மருத்துவம் அல்லாத பணியாளர்கள் உட்பட மருத்துவ பணியாளர்கள் கலந்து கொண்டனர்.  

மருத்துவ தினவிழாவில் மருத்துவர்களிடையே போட்டிகள் நடைபெற்றது வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.

தலைப்புச்செய்திகள்