Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

மாணவர்களுக்கு நடு ரோட்டில் பாடம் நடத்திய ஆசிரியர்கள்

ஜுலை 31, 2019 12:20

திருவண்ணாமலை: பள்ளிக்கு செல்ல வழி இல்லாததால் நடுரோட்டிலேயே மாணவர்களை அமர வைத்து ஆசிரியர்கள் பாடம் நடத்தினர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. திருவண்ணாமலை மாவட்டம் கண்ணமங்கலம் அடுத்த பள்ளகொல்லை கிராமத்தில் வயல்வெளிக்கு நடுவே கடந்த 50 ஆண்டுகளாக அரசு பள்ளி இயங்கி வருகிறது. பள்ளிக்கு செல்லும் வழியில் பலர் பட்டா நிலத்தில் வீடு கட்டி வசித்து வருகின்றனர். தனியார் பட்டா நிலத்தின் வழியாக தான் பள்ளி மாணவர்கள், ஆசிரியர்கள் பள்ளிக்கு சென்று வந்தனர்.

இந்த நிலையில் இன்று காலை அந்த பகுதியை சேர்ந்த ஒருவர் வீடு கட்ட பள்ளி செல்லும் வழியில் ஜல்லி, மணல் ஆகியவற்றை கொட்டி உள்ளார். இதனால் மாணவர்கள் பள்ளிக்கு செல்வதில் சிரமம் ஏற்பட்டது. பள்ளிக்கு செல்ல வழி விடாமல் வீடு கட்டி விடுவாரோ என நினைத்து இன்று காலை சாலை மறியலில் ஈடுபட்டனர். கண்ணமங்கலம் போலீசார் சப்-இன்ஸ்பெக்டர் கஜேந்திரன், வருவாய் ஆய்வாளர் அருள்குமார், கிராம நிர்வாக அலுவலர் நித்தியானந்தம் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மறியலில் ஈடுபட்டவர்களிடம் சமாதான பேச்சுவார்த்தை நடத்தினர். 

வீடு கட்ட ஏற்பாடு செய்தவரும் பள்ளிக்கு செல்ல வழிவிட்டு வீடு கட்டுவதாக உறுதியளித்தார். இதையடுத்து பொதுமக்கள் சாலை மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். அப்போது பள்ளி செல்ல வழி இல்லாததால் நடுரோட்டிலேயே மாணவர்களை அமர வைத்து ஆசிரியர்கள் பாடம் நடத்தினர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
 

தலைப்புச்செய்திகள்