Sunday, 30th June 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

கபே காபி டே சித்தார்த்தா மரணம்: அறிவுரை வழங்கிய ஆனந்த் மகேந்திரா

ஜுலை 31, 2019 12:31

புது டெல்லி: கர்நாடக முன்னாள் முதல் மந்திரியும், பா.ஜ.க. மூத்த தலைவருமான எஸ்.எம்.கிருஷ்ணாவின் மருமகன் சித்தார்த்தா. தொழில் அதிபரான இவர் உலகம் முழுவதும் கபே காபி டே எனும் பிரபல தேநீர் ஓட்டலும், ஏராளமான நிறுவனங்களும் நடத்திவந்தார்.

இந்நிலையில் நேற்று சித்தார்த்தா மாயமானார். போலீசார் தீவிரமாக தேடி வந்த நிலையில், அவரது சடலம் நேத்ராவதி ஆற்றில் இன்று காலை கண்டெடுக்கப்பட்டது. இதையடுத்து அவரது மரணம் உறுதியானது. இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இது குறித்து தொழிலதிபர் ஆனந்த் மகேந்திரா தனது டுவிட்டர் பக்கத்தில், ‘தனிப்பட்ட முறையில் எனக்கு சித்தார்த்தா குறித்து தெரியாது. அவரது நிதிநிலைகள் குறித்தும் எதுவும் தெரியாது. ஆனால், தொழில் முனைவோர் தங்கள் சுயமரியாதையை இழக்க, தொழில் தோல்வியை அனுமதிக்கக்கூடாது என்பதை நான் அறிவேன்.

இப்படி செய்வது தொழில் முனையும் சுய தொழிலையும் அழித்துவிடும்’ என தொழில் முனைவோருக்கு அறிவுரை கூறி, சித்தார்த்தா மரணம் தொடர்பான செய்தி ஒன்றையும் இணைத்து பதிவிட்டுள்ளார். 


 

தலைப்புச்செய்திகள்