Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

தமிழ் மொழியை வளர்க்க சொற்குவை இணையதளம்: தமிழக அரசின் முயற்சி

ஜுலை 31, 2019 12:50

சென்னை:செம்மொழியான தமிழ் மொழியின் அரிய கலைச் சொற்களை தமிழ்ப்படுத்தி மற்றவர்களும் அறிந்துகொள்ளும் வகையில், சொற்குவை என்னும் இணையதளத்தை தமிழக அரசு உருவாக்கியுள்ளது. 

கற்றலும், தேடலும் முழுமையாக இணையதளத்துக்கு மாறிவிட்ட நிலையில், உலகின் முதன்மை மொழியாக திகழும் தமிழைப் பாதுகாக்க பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. தமிழ் மொழியில் உள்ள வார்த்தைகளை கண்டறிந்து மற்றவர்களுக்கு எடுத்துரைக்கும் வகையில், sorkuvai.com என்ற வலைதளத்தை தமிழக அரசின் தமிழ் வளர்ச்சித் துறை உருவாக்கியுள்ளது. ஆங்கில மொழி கலப்புடன் நாம் பேசிவரும் நிலையில், ஆங்கிலத்தில் உள்ள சொற்களை தமிழ்படுத்தி, அதனை பயன்பாட்டுக்கு கொண்டுவரும் நோக்கத்தில் சொற்குவை தொடங்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவின் சிகாகோ நகரில் அண்மையில் நடைபெற்ற உலகத் தமிழர் மாநாட்டின்போது, இந்த சொற்குவை வலைதளம் தொடங்கப்பட்டது. புதிய புதிய வார்த்தைகளை கண்டறியும் முயற்சியில் இளைஞர்கள் ஆர்வமுடன் இணைந்து வருவதாக தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் மா.ஃபா.பாண்டியராஜன் தெரிவித்தார்.

இதுகுறித்து தெரிவித்த தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் மாஃபா.பாண்டியராஜன், ‘ஆங்கிலத்தில் ஒரு லட்சத்து 75 ஆயிரம் வார்த்தைகளே உள்ள நிலையில், தமிழில் 4 லட்சம் வார்த்தைகள் கண்டறியப்பட்டுள்ளதாகவும், 10 லட்சம் வார்த்தைகளை கண்டறிய முடியும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

வலைதளத்தில் 600 துறைகளைச் சேர்ந்த வார்த்தைகள் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன. வலைதளத்தில் இல்லாத வார்த்தைகளுக்கான தமிழ் அர்த்தத்தை 14469 என்ற கட்டணமில்லா தொலைபேசியை தொடர்புகொண்டு தெரிந்துகொள்ளலாம் என்று அகர முதலி இயக்கத்தின் திட்ட இயக்குநர் காமராசு தெரிவித்தார்.

தலைப்புச்செய்திகள்