Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

சித்தார்த்தா மரணம்: இறுதி நிமிடங்கள்

ஆகஸ்டு 01, 2019 04:43

பெங்களூரு : கோடீஸ்வரர் காபி அதிபர் வி.ஜி. சித்தார்த்தா புதன்கிழமை தனது சொந்த மாவட்டமான சிக்மகளூரில் உள்ள அவரது தோட்டத்தில் தகனம் செய்யப்பட்டார். அவரது மகன் அமர்த்தியா, இறுதி சடங்குகளை ஒக்கலிகா சமூகத்தின் மரபுகளின்படி செய்தார்.

வி.ஜி சித்தார்த்தா திங்கள்கிழமை காணாமல் போயிருந்தார்.தேடலுக்குப் பிறகு, புதன்கிழமை காலை அவரது உடல் நேத்ராவதி ஆற்றில் மிதப்பதை அதிகாரிகள் கண்டனர். அன்றே அவரது உடல் தகனம் செய்யப்பட்டது. முன்னாள் முதல்வர் எஸ்.எம்.கிருஷ்ணா, சித்தார்த்தாவின் மாமியார், அவரது மனைவி மற்றும் தொழிலதிபர்கள், அரசியல் பிரமுகர்கள் அவரது இறுதிச்சடங்கில் பங்கேற்றனர்.
சித்தார்தாவுக்கு வயது 59. அவருக்கு மனைவி மாளவிகா மற்றும் அமர்த்தியா, இஷான் என்னும் இரு மகன்கள் உள்ளனர்.

1) திங்கள்கிழமை முதல் அவர் காணவில்லை என்று வி.ஜி. சித்தார்த்தாவின் குடும்பத்தினர் செவ்வாய்க்கிழமை தெரிவித்தனர். அவரை கடைசியாக அவரது டிரைவர் பார்த்தார். வி.ஜி. சித்தார்த்தா அவரை ஒரு ஆற்றின் அருகே இறக்கிவிடச் சொல்லிவிட்டு போகச் சொல்லிவிட்டார்.
2) வி.ஜி. சித்தார்த்தா தனது இயக்குநர்கள் குழு மற்றும் அவரது நிறுவனமான காபி டே எண்டர்பிரைசஸ் ஊழியர்களுக்கு எழுதியதாகக் கூறப்படும் ஒரு கடிதத்தை விசாரணை அதிகாரிகள் கண்டுபிடித்தனர், அவர் கடன், வரி மற்றும் பங்கு வாங்குதல்கள் காரணமாக நிதிப் பிரச்சினைகளில் சிரமப்படுவதாக இருந்தது. கடிதம் தற்கொலையை சுட்டிக்காட்டியது.
3) காவல்துறையினர் பல ஏஜென்சிகளை உள்ளடக்கிய ஒரு பெரிய தேடுதல் நடவடிக்கையைத் தொடங்கினர், இது நேத்ராவதி ஆறு முழுவதும் தேடினர். அங்கு சித்தார்த்தா கடைசியாக திங்கள்கிழமை இரவு காணப்பட்டதாகக் கூறப்படுகிறது. 36 மணி நேர தீவிர தேடலுக்குப் பிறகு, ஒரு மீனவர் ஆற்றில் ஒரு சடலத்தைக் கண்டதாக போலீசாருக்கு தகவல் கொடுத்தார். புதன்கிழமை காலை சித்தார்த்தாவின் தடயங்களை போலீசார் கண்டுபிடித்தனர்.
4) அவரது உடலை அவரது நண்பர்கள் அடையாளம் கண்டுள்ளனர் என்று தட்சிண கன்னட மாவட்ட துணை ஆணையர் சசிகாந்த் செந்தில் தெரிவித்தார். ஒரு போலீஸ் அதிகாரி விசாரணை முடியும் வரை தற்கொலையா என்று உறுதி செய்யமுடியாது என்கிறார்.
5) மங்களூருவில் உள்ள வென்லாக் மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்குப் பின்னர், சித்தார்த்தாவின் சொந்த மாவட்டமான சிக்மகளூருக்கு உடல் எடுத்துச் செல்லப்பட்டது.
6) வி.ஜி. சித்தார்த்தரின் இறுதி சடங்குகளை அவரது மகன் அமர்த்தியா நிகழ்த்தினார். இறுதிச் சடங்கில் கர்நாடக முதலமைச்சர் பி.எஸ்.எடியூரப்பா, அவரது முன்னோடி எச்.டி. குமாரசாமி மற்றும் பல அரசியல் தலைவர்கள் கலந்து கொண்டனர்.
7) தனது கனவுகளைத் தொடர தனது தந்தையிடமிருந்து ரூ. ஐந்து லட்சம் கடன் வாங்கிய சித்தார்த், வெட்கப்படுபவராகவும், தன்னம்பிக்கை உடையவராகவும் அறியப்பட்டவர். ஆயிரக்கணக்கான இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்கினார்.
8) அவரது குடும்பத்திற்கு சொந்தமான 350 ஏக்கர் காபி எஸ்டேட் உள்ளது. அவர்கள் 140 ஆண்டுகளுக்கும் மேலாக வியாபாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.
9) வருமான வரித் துறையால் சித்தார்த்தா துன்புறுத்தப்பட்டதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. பிரதமர் நரேந்திர மோடி ஒரு சுதந்திரமான மற்றும் தொந்தரவில்லாத பொருளாதாரத்திற்கு வாக்களித்த மக்களை காட்டிக் கொடுத்துவிட்டதாக காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது.
10) சித்தார்த்தா நிறுவனத்தின் இடைக்கால தலைவராக இயக்குனர் எஸ்.வி.ரங்கநாத்தை அந்நிறுவனம் நியமித்துள்ளது. இதற்கிடையில், சி.சி.டி யின் பங்கு விலைகள் மற்றொரு பெரிய நாள் இழப்பை சந்தித்தன, இது 123.25 ஆக முடிவடைந்தது.
சி.சி.டி உரிமையாளரின் தற்கொலை நாட்டிற்கு ஆபத்தான சமிக்ஞை என்று மம்தா பானர்ஜி கூறியுள்ளார். ஆனால், சித்தார்தாவின் மரணத்தில் சதித்திட்டம், இருப்பதாக, விஜய் மல்லையா அரசாங்கத்தை குறை கூறுகிறார்.
 

தலைப்புச்செய்திகள்