Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

இஸ்ரோவின் கிளையை ரஷ்யாவில் தொடங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல்

ஆகஸ்டு 01, 2019 05:49

புதுடெல்லி: இந்திய விண்வெளி ஆய்வு மையமான இஸ்ரோவின் கிளையை ரஷ்யாவில் தொடங்க மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. 

பிரதமர் மோடி தலைமையில் டெல்லியில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன. இது குறித்து மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் பின்னர் செய்தியாளர்களிடம் விளக்கினார். விண்வெளி பரப்பை அமைதியான நடவடிக்கைகளுக்கு பயன்படுத்துவது தொடர்பாக பொலிவியாவிற்கும், இந்தியாவிற்கும் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ள மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டதாக அப்போது அவர் கூறினார். 

பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கான 10 சதவீத இடஒதுக்கீட்டு சலுகையை ஜம்மு காஷ்மீர் மாநிலத்திலும் நீட்டிக்கும் வகையில் ஜம்மு காஷ்மீர் மாநில இடஒதுக்கீட்டு சட்டத்தில் திருத்தம் கொண்டுவருவதற்கும் மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. மேலும் சிட்பண்ட் மோசடிகளை தடுக்கும் வகையில் சிட்பண்ட் சட்டத்தில் மாற்றம் கொண்டுவருவதற்கான மசோதாவிற்கும் மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதாக பிரகாஷ் ஜவடேகர் கூறினார். 

மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட மற்றொரு முக்கிய முடிவு இஸ்ரோவின் கிளையை ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் ஏற்படுத்துவது. விண்வெளிக்கு மனிதனை அனுப்புவது, நிலவிற்கு மனிதனை அனுப்புவது என இஸ்ரோ அடுத்தடுத்து இலக்குகளை நிர்ணயித்துள்ள நிலையில், இந்திய விண்வெளி வீரர்களுக்கு ரஷ்யாவில் பயிற்சி கொடுக்க அங்கு அமைய உள்ள இஸ்ரோவின் கிளை உதவியாக இருக்கும் எனக் கூறப்படுகிறது.    


 

தலைப்புச்செய்திகள்