Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

டெல்லியில் நில அதிர்வு ஏற்பட்டதாக தகவல்

பிப்ரவரி 20, 2019 06:19

புதுடெல்லி: உத்தர பிரதேச மாநிலத்தின் கந்த்லா நகரில் நிலநடுக்கம் ஏற்பட்டதையடுத்து தலைநகர் டெல்லியிலும் நில அதிர்வு உணரப்பட்டது. மத்திய ஆசியாவில் உள்ள தஜிகிஸ்தானில் இன்று காலை 7.05 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ரிக்டர் அளவில் 4.6 ஆக நிலநடுக்கம் பதிவானது. இந்த நிலநடுக்கத்தை தொடர்ந்து உத்தர பிரதேச மாநிலத்தில் உள்ள முசாபர்நகரின் தென்மேற்கு பகுதியில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.   

டெல்லியில் இருந்து 90 கி.மீட்டர் தொலைவில் உள்ள ஷாம்லி அருகே உள்ள கந்த்லா என்ற இடத்தில்  நிலநடுக்கம் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. இந்த நிலநடுக்கத்தை தொடர்ந்து, தலைநகர் டெல்லியிலும் சில வினாடிகள்  நில அதிர்வு உணரப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.   

டெல்லி வாசிகள் பலரும் நில அதிர்வை உணர்ந்ததாக டுவிட்டரில் பதிவிட்டு வருகின்றனர். இதனால், நில அதிர்வு தொடர்பான தகவல்கள் டுவிட்டரில் டிரெண்ட் ஆகியுள்ளன.  

 

தலைப்புச்செய்திகள்