Saturday, 28th September 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

ஆந்திரா சிறையில் 27 கைதிகளுக்கு எய்ட்ஸ் - ஜாமீனில் விடுதலை செய்யகோரி மனு

ஆகஸ்டு 03, 2019 04:41

ஆந்திரா: ஆந்திர மாநிலம் ராஜமுந்திரியில் மத்திய சிறைச் சாலை உள்ளது. இங்கு 1500-க்கும் மேற்பட்ட தண்டனை கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர்.

இவர்களில் குண்டூர் மாவட்டத்தை சேர்ந்த சல்லா எடுகொண்டலு என்பவர் ஒருவர் ஆவார். கொலை வழக்கு ஒன்றில் கைதாகி ஆயுள் தண்டனை பெற்ற இவர் கடந்த ஆண்டு பிப்ரவரி 2-ந்தேதி முதல் தண்டனை கைதியாக சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இவர் தனக்கு எய்ட்ஸ் நோய் சிகிச்சை பெற வேண்டியதிருப்பதால் ஜாமீனில் விடுதலை செய்ய வேண்டும் என ஆந்திரா ஐகோர்ட்டில் மனு செய்தார்.

இது தொடர்பாக சிறை அதிகாரிகளிடம் மொத்தம் எத்தனை கைதிகளுக்கு எய்ட்ஸ் நோய் உள்ளது? அவர்களுக்கு என்னென்ன மருத்துவ சிகிச்சைகள் அளிக்கப்படுகிறது என விளக்கம் கேட்கப்பட்டது. இதற்கு சிறையில் மொத்தம் 27 கைதிகளுக்கு எய்ட்ஸ் நோய் இருப்பதாக சிறை அதிகாரிகள் பதில் அளித்தனர். இதனால் அதிர்ச்சி அடைந்த நீதிபதிகள் இது தொடர்பாக விரிவான அறிக்கை அளிக்க உத்தரவிட்டனர்.

இதுகுறித்து ஜெயில் சூப்பிரண்டு ராஜாராவ் கூறியதாவது:-

எய்ட்ஸ் பாதிப்புள்ள 27 கைதிகளில் 19 பேர் தண்டனை காலத்தை அனுபவிக்க வரும் போதே அவர்களுக்கு நோய் இருந்தது. மற்ற 8 பேருக்கு எய்ட்ஸ் பாதிப்புக்கான காரணம் குறித்து விசாரணை நடந்து வருகிறது. அனைவருக்கும் வாரம் ஒரு முறை அரசு ஆஸ்பத்திரியில் மருத்துவ சிகிச்சைகள் அளிக்கப்படுவதாகவும், நோய் தடுப்புக்காக முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் கூறினர்.

தலைப்புச்செய்திகள்