Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

குளோபல் விட்னெஸ் அறிக்கையில் இடம்பெற்ற தூத்துக்குடியில் உயிர் நீத்த 13 சுற்றுச்சூழல் போராளிகள்

ஆகஸ்டு 03, 2019 01:09

புதுடெல்லி: 2018-ம் ஆண்டில், உலகம் முழுவதும் சுற்றுச்சூழலைப் பாதுகாக்க வேண்டி உயிர்நீத்த 164 பேர்களில், தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராடி கொல்லப்பட்ட 13 பேரின் பெயர்களும் இடம்பெற்றிருக்கின்றன.

உலகெங்கும், நிலவுரிமை மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்காக போராடி, 2018-ம் ஆண்டு 164 பேர் கொல்லப்பட்டதாக GLOBAL WITNESS எனும் சர்வதேச அமைப்பு அறிக்கை வெளியிட்டுள்ளது. காடுகள், சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிக்கும் தனியார் நிறுவனங்கள் மற்றும் அரசாங்கங்களை எதிர்த்து போராடி உயிர்நீப்பவர்களின் பட்டியலை, ஆண்டுதோறும் இந்த அமைப்பு வெளியிட்டு வருகிறது.

அந்தவகையில் 2018-ம் ஆண்டுக்கான பட்டியலில், மொத்தம் 164 சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கொல்லப்பட்டிருப்பதாகவும், அதில் இந்தியாவில் மொத்தம் 23 கொல்லப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது. இதில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராடி கொல்லப்பட்டவர்கள் மட்டும் 13 பேரின் பெயரும், தாதுமணல் கொள்ளையைத் தடுக்க முயன்றதால் கொல்லப்பட்ட நெல்லை காவலர் ஜெகதீசன் பெயரும் இடம்பெற்றுள்ளது.

அதிகபட்சமாக பிலிப்பைன்ஸ் நாட்டில் 30 பேரும், கொலம்பியாவில் 24 சுற்றுச்சூழல் ஆர்வலர்களும் கொல்லப்பட்டிருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

தலைப்புச்செய்திகள்