Friday, 5th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

வேதாந்தா அகாடமியில் 3வது நீலகேசவ் சுழற்கோப்பை கால்பந்து மற்றும் கை எறிபந்துபோட்டி

ஆகஸ்டு 03, 2019 02:29

கோயம்பேடு: சென்னை. வானகரத்தில் உள்ள வேதாந்தா அகாடமி பள்ளியில், பள்ளிகளுக்கு இடையிலான 3வது நீலகேசவ் சுழற்கோப்பை கால்பந்து மற்றும் கை எறிபந்துபோட்டிகள் ஆகஸ்டு 2 மற்றும் 3ம் தேதிகளில் வெகு விமரிசையாக நடைபெற்றது. இப்போட்டிகளில் சென்னையைச் சேர்ந்த 58 பள்ளிகளின் விளையாட்டு வீரர்கள் கலந்துகொண்டு தங்கள் திறமையை வெளிப்படுத்தினர்,  

போட்டியில் வெற்றிபெற்ற அணிகளுக்கு ரொக்கப்பரிசாக ரூ.34,000 மற்றும் சுழற்கேடயம் வழங்கி வேதாந்தா அகாடமி பள்ளி நிர்வாகத்தினர் விளையாட்டு வீரர்களை கௌரவித்தார்கள்.

பரிசளிப்பு விழாவில் சர்வதேச கூடைப்பந்துவீரர் வினித் ரவிமேத்யு, வேதாந்தா அகாடமி நிறுவனர் இராமதாஸ் மற்றும் பள்ளியின் இயக்குநர். சந்தீப் வாசு, பள்ளியின் முதல்வர் ர.பிரதீபா ஆகியோர் கலந்துகொண்டு வெற்றி பெற்ற பள்ளிகளுக்கு பரிசுகள் வழங்கி கௌரவித்தார்கள்.

கால்பந்தாட்டப் போட்டி:
* முதல் பரிசு - வேலம்மாள் மெட்ரிக்குலேசன் மேல்நிலைப் பள்ளி, பஞ்செட்டி 
* இரண்டாம் பரிசு - எஸ்.பி.ஓ.ஏ. ஜூனியர் காலேஜ் (சி.பி.எஸ்.இ) அண்ணாநகர்.
* மூன்றாம் பரிசு - பத்ம ஷேஷாத்திரி பாலபவன், கே.கே.நகர்.
* நான்காம் பரிசு - சின்மயா வித்யாலயா, அண்ணாநகர் ஆகிய அணிகள் பெற்றனர்.

கை எறிபந்து போட்டி:
* முதல் பரிசு - வேலம்மாள் மெட்ரிக்குலேசன் மேல்நிலைப் பள்ளி, முகப்பேர் கிழக்கு.
* இரண்டாம் பரிசு - இந்து சீனியர் செகண்ட்ரி பள்ளி, அடையார். 
* மூன்றாம் பரிசு - ஜெய்கோபால் கரோடியா மெட்ரிக்குலேசன் மேல்நிலைப் பள்ளி, கொளத்தூர். 
* நான்காம் பரிசு - ஷிராம் அகாடமி, மதுரவாயல் ஆகிய அணிகள் பெற்றனர்.
 

தலைப்புச்செய்திகள்