Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

போராட்ட டாக்டர்களுக்கு மத்திய அரசு எச்சரிக்கை

ஆகஸ்டு 04, 2019 05:52

புதுடில்லி: 'தேசிய மருத்துவ ஆணைய மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து நடத்தும் போராட்டத்தை, 'வாபஸ்' பெறாவிட்டால், சம்பந்தபட்ட டாக்டர்கள் மீது, ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும்' என, மத்திய சுகாதார அமைச்சகம் எச்சரித்துள்ளது.நாட்டில், தற்போது நடைமுறையில் உள்ள, தேசிய மருத்துவ கவுன்சிலுக்கு பதிலாக, தேசிய மருத்துவ ஆணையத்தை அமைப்பதற்கான மசோதா, பார்லிமென்டில் நிறைவேற்றப்பட்டது.

இந்த ஆணையம் தான், இனி, 'நீட்' தேர்வையும், மருத்துவ மேல் படிப்புக்கான, 'நெக்ஸ்ட்' தேர்வையும் நடத்தும்.இந்த மசோதாவுக்கு, நாடும் முழுவதும் உள்ள அரசு மருத்துவமனைகளில் பணியாற்றும் பயிற்சி டாக்டர்கள் எதிர்ப்பு தெரிவித்து, கடந்த மூன்று நாட்களாக போராட்டம் நடத்தி வருகின்றனர்.

போராட்டத்தால், டில்லியில் உள்ள எய்ம்ஸ், சப்தர் ஜங், ராம் மனோகர் லோகியா மருத்துவமனைகளில், நோயாளிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.'போராட்டத்தை வாபஸ் பெறாவிட்டால், சம்பந்தப்பட்ட டாக்டர்களுக்கு எதிராக, ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும்' என, சுகாதார அமைச்சகம் எச்சரித்துள்ளது.போராட்டம் நடத்தி வரும் டாக்டர்கள் கூறுகையில், 'அவசரமாக சிகிச்சை அளிக்க வேண்டிய நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து வருகிறோம்' என்றனர்.

    
 

தலைப்புச்செய்திகள்