Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

மகாராஷ்டிராவில் கனமழையால் 6 மாவட்டங்களுக்கு ரெட் அலெர்ட்

ஆகஸ்டு 04, 2019 06:19

மகாராஷ்டிரா: மகாராஷ்டிராவில் கனமழையால் மீண்டும் இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ள நிலையில், தானே, ராய்கட், நாசிக், புனே உட்பட 6 மாவட்டங்களில் இன்று ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மும்பையில் மழை பாதிப்பில் நேற்று ஒரே நாளில் 4 பேர் உயிரிழந்தனர்.

மும்பையில் இரண்டு நாட்களாக பெய்து வரும் மழையால் நகர் முழுவதும் வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது. அந்தேரி, மலாட், தஹிசார் உள்ளிட்ட இடங்களில் மழை வெள்ளத்தால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. மும்பை சென்டரலில் இருந்து துறைமுகம் செல்லும் வழித்தடத்தில் தண்ணீர் தேங்கியதால் ரயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளது. மும்பை விமான நிலையத்திற்கு வந்து செல்ல வேண்டிய விமானங்கள் 15 முதல் 30 நிமிடங்கள் வரை தாமதமாக இயக்கப்படுகின்றன.

தானேவில் கனமழையால் பல்வேறு இடங்களில் தண்ணீர் தேங்கியது. ரயில் நிலையத்தில், தண்டவாளங்களில் மழைநீர் சூழ்ந்ததால் ரயில் சேவையில் பாதிப்பு ஏற்பட்டது. ராய்கட் மாவட்டத்தில் சோன்யாச்சி வாடி கிராமத்தில் மழை வெள்ளத்தில் சிக்கித் தவித்த 63 பேர் பத்திரமாக மீட்கப்பட்டு பாதுகாப்பான இடத்தில் தங்க வைக்கப்பட்டனர். தாகுர்வாடி-மங்கி ஹில்ஸ் இடையேயான ரயில் வழித்தடத்தில் பாறாங்கற்கள் விழுந்தன. இதனால், 

புனே மாவட்டத்தில் உள்ள முல்ஷி அணையில் இருந்து வினாடிக்கு 40 ஆயிரம் கன அடி நீரும், பவானா அணையில் இருந்து 10 ஆயிரம் கன அடி நீரும் திறக்கப்பட்டுள்ளதால் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே, பால்கர், தானே, ராய்கட், நாசிக், புனே மற்றும் சடாரா ஆகிய 6 மாவட்டங்களில் இன்றும் பலத்த மழை பெய்யக் கூடும் என்பதால் ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

தலைப்புச்செய்திகள்