Monday, 1st July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

ஓடும் ரெயிலில் 2 பெண்கள் கொலை: பணம்-நகைகள் கொள்ளை

ஆகஸ்டு 04, 2019 12:24

மதுரா: உத்திர பிரதேசத்தைச் சேர்ந்த மீனா(55), மனிஷா(21), மற்றும் அவரது மகன் ஆகாஷ்(23) ஆகிய மூவரும் மனிஷாவின் பொறியியல் படிப்பிற்கான நுழைவுத்தேர்வுக்காக டெல்லியில் இருந்து கோட்டா செல்லும் நிஜாமுதீன்-திருவனநந்தபுரம் அதிவிரைவு ரெயிலில் கோடட்டாவிற்கு பயணம் செய்து கொண்டிருந்தனர்.

ரெயில் புறப்பட்டு சில மணிநேரங்கள் ஆன நிலையில் தங்கள் உடமைகளை சிலர் திருட முயற்சி செய்தனர்.  அப்போது மீனாவும் அவரது மகள் மனீஷாவும் கொள்ளையர்களிடம் இருந்து தங்கள் உடமைகளை காப்பாற்ற முயன்றனர். அந்த ரெயில் பெட்டியின் வாசல் வரை வந்து விட்ட கொள்ளையர்கள் இருவரையும் ஓடும் ரெயிலில் இருந்து வெளியே தள்ளி விட்டு பைகளை எடுத்துச் சென்றனர்.

இதை பார்த்த ஆகாஷ் ரெயிலின் அபாய சங்கிலியை பிடித்து இழுத்தார். அதற்குள் ரெயில் பிருந்தாபன் ரெயில் நிலையத்தை அடைந்தது. அங்கு நடந்த சம்பவம் குறித்து ரெயில்வே போலீசாரிடம் தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு ஆம்புலன்ஸ் செல்லும் முன்பாக தாயும் மகளும் பரிதாபமாக உயிரிழந்தனர்.

குற்றவாளிகளின் மீது கொலை மற்றும் கொள்ளை வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர்களை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருவதாகவும் ரெயில்வே போலீசார் தெரிவித்துள்ளனர்.

தலைப்புச்செய்திகள்