Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

அதிகபட்ச பாதுகாப்பில் டில்லி மெட்ரோ

ஆகஸ்டு 06, 2019 03:37

புதுடில்லி: ஜம்மு - காஷ்மீர் விவகாரம் மற்றும் சுதந்திர தினத்தை முன்னிட்டு, டில்லி, 'மெட்ரோ' ரயில் நிலையங்களுக்கு, அதிகபட்ச பாதுகாப்பு வழங்க, மத்திய அரசு உத்தரவிட்டு உள்ளது. ஜம்மு - காஷ்மீர் மாநிலத்திற்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்து, ரத்து செய்யப்படுவதாக, மத்திய உள்துறை அமைச்சர், அமித் ஷா, பார்லிமென்டில் நேற்று அறிவித்தார். மேலும், வருகிற, 15ம் தேதி, 73வது சுதந்திர தின விழா, நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது.

இவ்விரண்டையும் மனதில் கொண்டு, நாடு முழுவதும் உள்ள பல முக்கிய இடங்களின் பாதுகாப்பை பலப்படுத்த, மத்திய அரசு முடிவு செய்தது.இந்நிலையில், நாள் ஒன்றுக்கு, 28 லட்சம் பேர் பயணிக்கும் டில்லி மெட்ரோ ரயில் நிலையங்களில், அசம்பாவிதங்கள் நிகழாமல் தடுக்க, அதிகபட்ச பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.டில்லி மெட்ரோ ரயில் சேவை, உத்தர பிரதேச மாநிலம் நொய்டா, காசியாபாத், பரிதாபாத், ஹரியானாவின் குர்கான் உட்பட, 220 ரயில் நிலையங்களை உள்ளடக்கி உள்ளது. 

இங்கு, மத்திய தொழிலாளர் பாதுகாப்புபடையினர் மற்றும் பயங்கரவாத தடுப்பு படையினர் கூடுதலாக பணியமர்த்தப்பட்டுஉள்ளனர். மேலும், பல ரயில் நிலையங்களில், நவீன பாதுகாப்பு கருவிகள் உதவியுடன், கூடுதல் கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

தலைப்புச்செய்திகள்