Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

பிரதமர் மோடியின் துணிச்சலான முடிவுகள்

ஆகஸ்டு 06, 2019 03:45

புதுடில்லி: காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து தரும், பிரிவு 370 ரத்து செய்து, துணிச்சலான முடிவை பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு எடுத்துள்ளது.

நாட்டின் வளர்ச்சிக்காக பிரதமர் மோடி எடுத்த சில துணிச்சலான முடிவுகள்:

* பணமதிப்பிழப்பு: கடந்த, 2016 நவ., 8ல், புழக்கத்தில் இருந்த, 1000, 500 ரூபாய் நோட்டுகள் செல்லாது என, அறிவித்தார். இதனால், கறுப்புபணம் தடுப்பு, பயங்கரவாதிகளுக்கு நிதி தடை, 'டிஜிட்டல்' பரிவர்த்தனை அதிகரிப்பு, வரி கட்டுபவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு உள்ளிட்ட பல பயன்கள் ஏற்பட்டன.

* திட்டக்கமிஷன் கலைப்பு: திட்டக்குழு கலைக்கப்பட்டு, 2015 ஜன., 1ல், 'நிடி ஆயோக்' என்ற அமைப்பு தொடங்கப்பட்டது. அனைத்து மாநில முதல்வர்களும், உறுப்பினர்களாக உள்ளனர்.

* ஜி.எஸ்.டி.: நாடு முழுவதும், ஒரே சீரான வரி விதிப்பை கொண்டு வர, ஜி.எஸ்.டி., எனப்படும், சரக்கு மற்றும் சேவை வரி முறை, 2017 ஜூலை, 1ல் அமல். இதில், 5 சதவீதம், 12, 18, 28 சதவீதம் என்ற விகிதங்களில் வரி விதிக்கப்படுகிறது.

* சர்ஜிக்கல் ஸ்டிரைக் 2.0 : காஷ்மீரின், புல்வாமா மாவட்டத்தில், 2019 பிப்., 14ல், ரோந்து சென்ற சி.ஆர்.பி.எப்., வீரர்கள் வாகனம் மீது, பயங்கரவாதிகள் நடத்திய தற்கொலைப்படை தாக்குதலில், 40 வீரர்கள் மரணம் அடைந்தனர். இதற்கு, பதிலடி தரும் விதமாக, பிப்., 26ல், பாகிஸ்தானின் பாலகோட்டில் புகுந்து, பயங்கரவாத முகாமை மீது, இந்திய விமானப்படை வெடிகுண்டு வீசி அழித்தது.

* இடஒதுக்கீடு: ஜன., 12ல், எஸ்.சி,- எஸ்.டி மற்றும் ஓ.பி.சி., பிரிவுகளில் வராதவர்களில், ஆண்டு வருமானம், 8 லட்சம் ரூபாய்க்கு கீழ் உள்ள, உயர் ஜாதியினருக்கு, பொருளாதார அடிப்படையில், கல்வி மற்றும் வேலைவாய்ப்பில், 10 சதவீத இட ஒதுக்கீடு வழங்கும் சட்டம் அமல்.

* முத்தலாக் தடை மசோதா: முஸ்லிம்களில், மூன்று முறை, 'தலாக்' கூறி விவாகரத்து செய்யும் நடைமுறையை குற்றமாக்கும், முத்தலாக் தடை சட்டம், 2019 ஜூலை 30ல், நிறைவேற்றம்.

* சிறப்பு அந்தஸ்து ரத்து: காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து தரும், பிரிவு 370, நேற்று ரத்து செய்யப்பட்டது.

தலைப்புச்செய்திகள்