Sunday, 7th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

விமானங்களைப் போல் ரயில்களிலும் ஏர்-ஹோஸ்டஸ்: பயணிகளை உற்சாகப்படுத்த முடிவு

ஆகஸ்டு 06, 2019 05:01

புதுடெல்லி: உலகம் முழுவதும் விமானத்தில் பயணம் செய்பவர்களுக்கு உதவி செய்ய விமானப் பெண்கள் நியமிக்கப்பட்டு பயணிகளுக்கு அவர்கள் பணிவிடை செய்து வருகின்றனர். இந்நிலையில் அதைப் போல ரயில்களிலும் பணிப் பெண்களை நியமித்து பயணிகளை கவர ரயில்வே துறை முடிவு செய்துள்ளது.

இந்த திட்டம் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டால் மற்ற ரயில்களிலும் இதுபோன்ற பணிப்பெண்களை நியமிக்க ரயில்வே நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.

அதன்படி டெல்லி - காசி இடையே இயக்கப்படும் வந்தே பாரத் விரைவு ரயிலில் 34  பணிப்பெண்கள் வேலைக்கு அமர்த்தப்பட்டுள்ளனர். சோதனை முயற்சியாக வந்தே பாரத் விரைவு ரயிலில் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகின்றது.

வந்தே பாரத் ரயிலில் பணி புரியும்  அப்பணிப்பெண்களுக்கு மாதம் ரூ. 25,000 ஊதியம் வழங்கப்பட உள்ளது. இத்திட்டம் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டால் அடுத்து அனைத்து ரயில்களிலும் பணிப் பெண்கள் அமர்த்தப்படுவார்கள் என ரயில்வே துறை அறிவித்துள்ளது.

தலைப்புச்செய்திகள்