Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

முன்னாள் அமைச்சர் ஜெனிபர் சந்திரன் காலமானார்

ஆகஸ்டு 06, 2019 12:40

மதுரை: முன்னாள் அமைச்சர் ஜெனிபர் சந்திரன் உடல் நலக்குறைவு காரணமாக மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில், சிகிச்சை பலனின்றி ஜெனிபர் சந்திரன் காலமானார்.  

ஜெனிபர் சந்திரன்  1996 ஆம்  ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலில், திருச்செந்தூர் தொகுதியில் இருந்து திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இவர் திமுக ஆட்சியில் மீன்வளத்துறை அமைச்சராக பணியாற்றினார். 

2004 ஆம் ஆண்டு திமுகவில் இருந்து விலகிய ஜெனிபர் சந்திரன் அதிமுகவில் இணைந்தார்.  அவருக்கு அதிமுக.வில் மாநில மீனவர் அணியின் இணைச் செயலர் பதவி வழங்கப்பட்டது. மேலும், தூத்துக்குடி மாவட்ட பொறுப்பாளர் பதவியும் வழங்கப்பட்டது. இதன் பின்னர் 2010-ல் மாவட்ட பொறுப்பாளர் பதவியிலிருந்து ஜெனிபர் சந்திரன் நீக்கப்பட்டார். ஆனால், அதிமுக மாநில மீனவரணி இணைச் செயலாளராக தொடர்ந்து இருந்து வந்தார்.
 

தலைப்புச்செய்திகள்