Friday, 5th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

சுஷ்மா சுவராஜ் வாழ்க்கை வரலாறு அரசியல் பயணம்

ஆகஸ்டு 07, 2019 02:52

புதுடெல்லி: சுஷ்மா சுவராஜ், வெளியுறவுத்துறை மந்திரியாகவும் பாரதீய ஜனதா கட்சியின் முக்கிய தலைவர்களில் ஒருவராகவும் திகழ்ந்தவர். இந்தியாவின்  பதினைந்தாவது மக்களவையின் எதிர்கட்சித் தலைவராக இருந்துள்ளார். இவர் டெல்லியின் முன்னாள் முதல்-மந்திரியாக பதவி வகித்துள்ளார். 

சுஷ்மா சுவராஜ் இந்திய வெளியுறவுத் துறை மந்திரியாக 26 மே 2014 முதல் 29 மே 2019 வரை பதவியில் இருந்தார்.

முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதியாகவும் பதவி வகித்துள்ளார் சுஷ்மா சுவராஜ்.

நாடாளுமன்ற உறுப்பினராக ஏழு முறை தேர்ந்தெடுக்கப்பட்டார். மூன்று முறை சட்டசபை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். டெல்லியின் ஐந்தாவது முதலமைச்சராக 1998-ம் ஆண்டு அக்டோபர் 13 ஆம் தேதி பதவி ஏற்றார்.  மேலும் அவர் டெல்லியின் முதல் பெண் முதலமைச்சராக தேர்ந்தெடுக்கப்பட்டவர். அவர் பல சமூகங்களிலும் கலாச்சாரங்களிலும் தொடர்புடையவர்.

இந்திரா காந்திக்குப் பிறகு வெளிவிவகார மந்திரி பதவி வகித்த இரண்டாவது பெண் சுஷ்மா சுவராஜ் ஆவார்.  2006-ம் ஆண்டு முதல் 2009-ம் ஆண்டு வரையிலான இந்திய-இஸ்ரேல் நாடாளுமன்ற நட்புக் குழுவின் தலைவராக செயல்பட்டார்.

சுஷ்மா சுவராஜ் அம்பாலாவில் உள்ள எஸ்.டி கல்லூரியின் என்.சி.சி சிறந்த கேடட் விருது பெற்றார்.

# 1973 ல் இந்தியாவின் உச்சநீதிமன்றத்தில் வழக்கறிஞராகப் பணியைத் தொடங்கினார்.

# மே 2008 - 2009: மாநிலங்களவை ஹவுஸ் கமிட்டி உறுப்பினர்.

# 2009 ஆம் ஆண்டு டிசம்பர் 21 ஆம் தேதி சுஷ்மா சுவராஜ் மக்களவையில் பாரதீய ஜனதா கட்சி நாடாளுமன்றக் கட்சியின் தலைவராக நியமிக்கப்பட்டார்.

27 மே 2014 முதல் 16 பிப்ரவரி 2016 வரை மத்திய அமைச்சரவையில் வெளியுறவு மற்றும் வெளிநாட்டு இந்திய விவகாரங்களுக்கான துறையில் அமைச்சராக பணியாற்றினார்.

வெளிநாடுகளில் சிக்கலில் சிக்கிய இந்தியர்களுக்கு தேவையான உதவியை சுஷ்மா சுவராஜ் செய்து வந்தார். சமூக வலைதளங்களில், இந்தியர்கள் எழுப்பிய கேள்விக்கு உடனுக்குடன் பதிலளித்து வந்தார். இதனால், பலரும் அவரை பாராட்டி வந்தனர். 

சமீபத்தில் நடந்த மக்களவை தேர்தலில், உடல்நலக்குறைவால் சுஷ்மா சுவராஜ் தேர்தலில் போட்டியிடவில்லை.

இந்நிலையில் கடந்த ஆண்டு சிறுநீரக மாற்று அறுவை சிக்கிச்சை செய்து கொண்டார்.  இந்நிலையில் திடீரென ஏற்பட்ட மாரடைப்பு காரணமாக டெல்லி எம்ய்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்,   இந்நிலையில் சிகிச்சை பலனின்றி  டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் இந்திய வெளியுறவுத் துறை மந்திரி சுஷ்மா சுவராஜ் காலமானார்.  சுஷ்மா அவர்களின் மறைவிற்கு அரசியல் தலைவர்கள் உள்ளிட்டோர் தொடர்ந்து தங்கள் இரங்கல் செய்தியை தெரிவித்து வருகின்றனர். 


 

தலைப்புச்செய்திகள்