Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

சுஷ்மாவுக்கு அமெரிக்கா, சீனா புகழாரம்

ஆகஸ்டு 07, 2019 01:20

புதுடில்லி: மாரடைப்பால், உயிரிழந்த முன்னாள் வெளியுறவு அமைச்சர் சுஷ்மா சுவராஜ்க்கு, சீனா, அமெரிக்கா நாட்டு தூதர்கள் புகழாரம் சூட்டியுள்ளனர்.

இது தொடர்பாக அமெரிக்க தூதரகம் வெளியிட்ட அறிக்கை: உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் இந்தியாவின் தூதராக சுஷ்மா சுவராஜ் பார்க்கப்பட்டார். அனைவராலும் மதிக்கப்பட்டார். வெளியுறவு அமைச்சராக, இந்தியா - அமெரிக்கா இடையிலான உறவை வலுப்படுத்தியதில் முக்கிய பங்காற்றினார். 2019 ல், இரு நாட்டு அமைச்சர்களுக்கு இடையிலான பேச்சுவார்த்தையை சிறப்பாக நடத்தினார்.

சீன தூதர் சன் வெயிடோங்: இந்தியாவின் முன்னாள் வெளியுறவு அமைச்சர் சுஷ்மா காலமான செய்தி வருத்தம் அளிக்கிறது. இந்தியா சீனா இடையிலான உறவுக்கு அவர் அளித்த பங்களிப்பு பாராட்டுக்குரியது. அவரது குடும்பத்திற்கு எனது இரங்கலை தெரிவித்து கொள்கிறேன்.

ஜப்பான் தூதர் கென்ஜி ஹிரமட்சு: இந்திய வெளியுறவு முன்னாள் அமைச்சர் சுஷ்மா மறைவு செய்தி வருத்தம் அளிக்கிறது. ஜப்பான் அரசு மற்றும் மக்கள் சார்பாக, அவரது குடும்பத்திற்கும், இந்திய மக்களுக்கும் இரங்கல் தெரிவித்து கொள்கிறேன். 

புத்த மத தலைவர் தலாய் லாமா: இந்த கடினமான நேரத்தில், எனது இரங்கலை தெரிவித்து கொள்கிறேன். பொது மக்களிடம் நட்புடன் நடந்து கொள்வதிலும், அக்கறை செலுத்தியதிலும் அனைவராலும் மதிக்கப்பெறறார். மற்றவர்களுக்காக தனது வாழ்க்கையை சேவையாக மாற்றினார். அர்த்தமுள்ள வாழ்க்கையை வாழ்ந்தார். இவ்வாறு அவர் கூறினார்.
 
 

தலைப்புச்செய்திகள்