Sunday, 30th June 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

கவனமாக இருங்கள்: பாஜகவினருக்கு மோடி அறிவுரை

ஆகஸ்டு 08, 2019 05:49

டெல்லி: நெஞ்சை நிமிர்த்திக் கொண்டு திரிய வேண்டாம், நாம் செல்ல வேண்டிய தூரம் நிறைய இருக்கிறது என்று பாஜகவின் முக்கிய உறுப்பினர்களுக்கு பிரதமர் மோடி அறிவுரை வழங்கி உள்ளார். காஷ்மீர் பிரச்சனை தற்போது உச்சகட்ட பரபரப்பில் சென்று கொண்டு இருக்கிறது. காஷ்மீருக்கு வழங்கிய சிறப்பு அந்தஸ்தை நீக்குவதாக மத்திய அரசு அறிவித்து உள்ளது. அது மட்டுமில்லாமல் ஜம்மு காஷ்மீரை இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரித்து உள்ளது. இது பாஜகவினர் மற்றும் ஆர்எஸ்எஸ் அமைப்பினர் மத்தியில் பெரிய மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இந்த நிலையில் இந்த விஷயம் குறித்து பாஜகவினர் பெரிதாக கொண்டாட கூடாது என்று பிரதமர் மோடி தெரிவித்து இருக்கிறார். பாஜக அமைச்சர்கள் முன் பேசிய அவர், நாம் மிக சிறப்பான வரலாற்று விஷயம் ஒன்றை நிகழ்த்தி இருக்கிறோம். ஆனால் இதை சாதனையாக கருத கூடாது. நாம் இதை வரலாற்றில் செய்த திருப்பமாக கருத வேண்டும். 

நாம் இதை சாதனையாக கருதி கொண்டாட கூடாது. நெஞ்சை நிமிர்த்தி சுற்றிக்கொண்டு இருக்க கூடாது. இனிமேல்தான் நாம் கவனமாக இருக்க வேண்டும். நாம் செல்ல வேண்டிய தூரம் நிறைய இருக்கிறது. அதில் கவனம் செலுத்த வேண்டும்.  

இதை எதிர்ப்பவர்கள் கருத்துக்களை நாம் புறக்கணிக்க கூடாது. நாம் அனைவரும் சொல்வதை காது கொடுத்து கேட்க வேண்டும். நாட்டில் சில மக்கள் இந்த விஷயத்தை எதிர்க்கிறார்கள். அவர்கள் ஏன் எப்படி செய்கிறார்கள் என்று நாம் பார்க்க வேண்டும். 

நம்முடைய பாதுகாப்புதான் இப்போது முக்கியம். கொண்டாட்டங்களில் ஈடுபடுவது முக்கியம் இல்லை. நாம் மாற்ற வேண்டிய விஷயங்கள் இன்னும் நிறைய இருக்கிறது. அதற்குள் நாம் எல்லாம் சாதித்துவிட்ட திருப்தியில் இருக்க கூடாது என்று பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார். பாஜகவினர் இடையே மோடியின் இந்த கோரிக்கை வைரலாகி உள்ளது.
 

தலைப்புச்செய்திகள்