Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

வேலூர் தேர்தல்: அதிமுக வேட்பாளர் தற்போது முன்னிலை

ஆகஸ்டு 09, 2019 04:02

வேலூர்: வேலூர் பாராளுமன்ற தொகுதிக்கான தபால் வாக்குகள் எண்ணப்பட்டன. பின்னர் வாக்குப்பதிவு எந்திரத்தில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டன. துவக்கத்தில் அதிமுக கூட்டணி வேட்பாளர் ஏ.சி.சண்முகம் முன்னிலை பெற்றார். 

குறிப்பாக ஆம்பூர், வேலூர், குடியாத்தம், கே.வி.குப்பம் சட்டமன்றத் தொகுதிகளில் ஏ.சி.சண்முகம் அதிக வாக்குகள் பெற்று முன்னிலை வகித்தார். அணைக்கட்டு சட்டமன்றத் தொகுதியில் கதிர் ஆனந்த் முன்னிலை பெற்றிருந்தார். 

முதல் சுற்று முடிவில் ஏ.சி.சண்முகம் 25544 வாக்குகளும்,  திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் 24064 வாக்குகளும் பெற்றிருந்தனர். நாம் தமிழர் கட்சி வேட்பாளர் தீபலட்சுமி 400 வாக்குகள் பெற்றிருந்தார். இதன்மூலம் ஏ.சி.சண்முகம் 1480 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் இருந்தார். 

அடுத்த சுற்றிலும் துவக்கத்தில் ஏ.சி.சண்முகம் முன்னிலை பெற்றார். அதன்பின்னர் திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் முன்னிலை பெறத் தொடங்கினார். 

அடுத்து மீண்டும் அதிமுக வேட்பாளர் தற்போது முன்னிலையில் உள்ளார். தற்போது 2,667 வாக்குகள் வித்தியாசத்தில் ஏ.சி.சண்முகம் முன்னிலையில் உள்ளார். அதாவர்து 57,511 வாக்குகள் ஏ.சி.சண்முகமும், 54,844 வாக்குகள் கதிர் ஆனந்தும் பெற்றுள்ளனர்.

தலைப்புச்செய்திகள்