Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

தொடர் கனமழை: கொச்சி விமான நிலையம் மூடல்

ஆகஸ்டு 09, 2019 04:40

கொச்சி: கேரளா மாநிலம் கொச்சி விமான நிலையம் வரும் 11ஆம் தேதி பிற்பகல் 3 மணி வரை மூடப்படுவதாக விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதனால் பயணிகள் வெளியூர் மற்றும் வெளிநாடு செல்வது பாதிக்கப்பட்டுள்ளது.

மேலும் கனமழை காரணமாக கேரளாவில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் கேரளா மாநிலம் கல்பேட்டா என்ற பகுதியில் கனமழை காரணமாக வீடு ஒன்று இடிந்து தரைமட்டமான வீடியோ இணையதளங்களில் வைரலாகி வருகிறது. நல்லவேளையாக வீடு இடிந்து விழுந்த போது வீட்டில் யாரும் இல்லை என்பதால் உயிர்ச்சேதம் தவிர்க்கப்பட்டது.

மேலும் முன்னாள் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தியின் தொகுதியான வயநாடு பகுதியில் கன மழை காரணமாக நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இந்த நிலச்சரிவில் பல பொதுமக்கள் பலியாகியிருக்கலாம் என அச்சம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலச்சரிவு குறித்த தகவல் தெரிந்தவுடன் மீட்புப்படையினர் வயநாடு நோக்கி விரைந்துள்ளனர்.

தலைப்புச்செய்திகள்