Sunday, 7th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

5 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை

ஆகஸ்டு 10, 2019 10:24

சென்னை : நீலகிரி, கோவை, தேனி, நெல்லை, கன்னியாகுமரி ஆகிய 5 மாவட்டங்களில் அடுத்த 2 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் ,செய்தியாளர்களிடம் பேசுகையில்: 
மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியை ஒட்டிய தமிழக மலை மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. நீலகிரி, கோவை, தேனி, நெல்லை, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் அடுத்த 2 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. உள் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் மிதமான மழைப்பெய்ய வாய்ப்புள்ளது.

சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். சில இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளது. தென் கடலோர பகுதிகளில் காற்றின் வேகம் அதிகமாக இருக்கும். அடுத்த 2 நாட்களுக்கு மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம். கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக நீலகிரி மாவட்டம் அவலாஞ்சியில் 35 செ.மீ., ம், மேல் பவானியில் 19 செ.மீ.,ம் மழைபெய்துள்ளது என்றார்.

தலைப்புச்செய்திகள்