Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

பயணத்தின் போதும் ஷாப்பிங்: புதிய சேவையை தொடங்கியது இந்திய ரயில்வே

ஆகஸ்டு 10, 2019 01:33

டெல்லி: ஓடும் ரயிலில் பயணிகளுக்குத் தேவையான ஷாப்பிங் பொருட்களை விற்பனை செய்யும் சேவையை நேற்று முதல் இந்திய ரயில்வே தொடங்கியுள்ளது. இதனால் பயணிகள், பயணத்தோடு ஷாப்பிங் அனுபவத்தையும் பெறலாம் என ரயில்வேத் துறை கூறியுள்ளது. அப்படி என்னென்ன பொருட்களை மக்கள் வாங்கலாம் என பட்டியலிட்டுள்ளது. அதில் வீட்டுக்குத் தேவையான பொருட்கள், வாய் பராமரிப்புப் பொருட்கள், சருமப் பராமரிப்பு, தலைமுடிப் பராமரிப்புப் பொருட்கள் , காஸ்மெடிக்ஸ் மற்றும் உடல் நலனுக்குத் தேவையான பொருட்கள் , பேப்பர் பொருட்கள், ஸ்டேஷ்னரி பொருட்கள் என பல பொருட்கள் பட்டியலில் வெளியிட்டுள்ளது இந்திய இரயில்வேத் துறை. இந்த பொருட்களை அதன் உண்மையான விலைப்பட்டியலிலேயே விற்கப்படும்.

பணம் செலுத்தும் முறையையும் மக்களுக்கு ஏதுவாக கிரெட் கார்ட், டெபிட் கார்ட், கூகுள் பே, பேடிஎம் ஆகியவற்றின் மூலம் பணத்தை செலுத்தலாம் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த சேவை தற்போது அகமதாபாத் - மும்பை வழிப்பாதையில் செல்லும் கர்னாவதி விரைவு ரயிலில் மட்டும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

அதேபோல் பொருட்களை கூவி கூவி விற்பதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. அதற்கு பதிலாக பொருட்கள் அடங்கிய விலைப்பட்டியல் அட்டை பயணிகளுக்கு அடுத்தடுத்த முறையில் ஒவ்வொருவருக்காக பரிமாற்றம் செய்ய வேண்டும். அதில் அவர்கள் பார்த்து எது வேண்டுமோ சொல்லி வாங்கிக் கொள்ளலாம் என ரயில்வே கூறியுள்ளது. மும்பையின் மேற்கு ரயில்வே பகுதி இந்த திட்டத்தை கடந்த ஆண்டே நடைமுறைப்படுத்தியது. இதற்காக விருதும் வாங்கியது. விற்பனையாளர்கள் ஐந்து வருடங்கள் தங்கள் பொருட்களை விற்க அனுமதி அளித்துள்ளது. 
 

தலைப்புச்செய்திகள்