Saturday, 28th September 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

சூதாட்ட கிளப்பா: டிஸ்மிஸ் செய்யப்பட்ட ஊழியருக்கு ஹைகோர்ட் கண்டனம்

ஆகஸ்டு 10, 2019 02:28

சென்னை: தொழிலாளர் நீதிமன்றங்கள் சூதாட்ட களமல்ல என்று உயர் நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது. உரிய விடுப்பு அனுமதியின்றி, 1990 ஜூன் முதல் 1991 ஏப்ரல் வரை 10 மாதங்கள் பணிக்கு வராததால் துப்புரவு பணியாளர் பென்சிலய்யாவை பணிநீக்கம் செய்து சென்னை மாநராட்சி, 1993ல் உத்தரவு பிறப்பித்தது. இந்த உத்தரவை எதிர்த்து பென்சிலய்யா 14 ஆண்டுகள் கழித்து 2007ல் சென்னை தொழிலாளர் தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த 2வது கூடுதல் தொழிலாளர் நீதிமன்றம், பென்சிலய்யாவை பணிநீக்கம் செய்த உத்தரவை உறுதி செய்து, 50 ஆயிரம் ரூபாய் இழப்பீடு வழங்க உத்தரவிட்டது. கடந்த 2012ல் பிறப்பிக்கப்பட்ட இந்த உத்தரவை எதிர்த்து பென்சிலய்யா உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி எஸ்.வைத்தியநாதன், பணிநீக்கத்தை எதிர்த்து 14 ஆண்டுகள் கழித்து வழக்கு தொடர, தொழிலாளர் நீதிமன்றம் சூதாட்ட களமல்ல என கண்டனம் தெரிவித்தார். மேலும், பணி தொடர்பான வழக்குகளை மூன்று ஆண்டுகளுக்குள் தாக்கல் செய்ய வேண்டும் என தொழில் தகராறு சட்டத்தில் திருத்தம் கொண்டு வரப்பட்டதைச் சுட்டிக்காட்டிய நீதிபதி, பென்சிலய்யாவை பணி நீக்கம் செய்த உத்தரவை உறுதி செய்து உத்தரவிட்டார். அதேசமயம், 50 ஆயிரம் ரூபாய் இழப்பீட்டு தொகையை 2007 முதல் ஆண்டுக்கு 6 சதவீத வட்டியுடன் 15 நாட்களுக்குள் வழங்க சென்னை மாநகராட்சிக்கு உத்தரவிட்டார்.

தலைப்புச்செய்திகள்