Saturday, 28th September 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

சாலைக்காக மரத்தை வெட்டிய அரசு: சகோதரனைப் போல் வளர்த்த சிறுமி கதறி அழும் காட்சி

ஆகஸ்டு 11, 2019 06:35

மணிப்பூர்: தான் நட்டு வளர்த்த மரங்கள் வெட்டப்பட்டதால் வேதனைகுள்ளாகி அழுத 9 வயது சிறுமியை, மணிப்பூர் மாநில முதலமைச்சர் பைரன்சிங் அம்மாநில அரசுத் திட்டத்தின் தூதுவராக நியமித்துள்ளார்.

மணிப்பூர் மாநிலம் கக்சிங் மாவட்டத்தைச் சேர்ந்த சிறுமி வாலண்டினா எலங்பம், 1-ம் வகுப்பு படிக்கும்போது வீட்டுக்கு அருகே ஆற்றங்கரையோரம் மரக்கன்றுகளை நட்டுள்ளார்.

சாலை விரிவாக்கப்பணிக்காக அந்த மரங்கள் வெட்டப்பட்டதால் வாலண்டினா கடுமையாக அழ தொடங்கியுள்ளார், அதனை அவரது தாய் வீடியோ எடுத்துள்ளார். உறவினர் மூலம் அந்த வீடியோ முகநூலில் பதிவிடப்பட, சமூக வலைதளங்களில் வேகமாக பரவியது.

வெட்டுப்பட்டு கிடக்கும்  மரங்களை காட்டி, அவற்றை சகோதரனை போல் பாவித்து வளர்த்ததாக வாலண்டினா அழுதுக்கொண்டே கூறும் அந்த வீடியோ அம்மாநில முதலமைச்சர் பைரன் சிங் வரை சென்றடைந்தது.

அதனை தொடர்ந்து பசுமை மணிப்பூர் திட்டத்தின் தூதுவராக வாலண்டினாவை, முதலமைச்சர் பைரன்சிங் நியமித்துள்ளார்.


 

தலைப்புச்செய்திகள்