Sunday, 7th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

தன்னம்பிக்கையை பெண்கள் வளர்த்துக்கொள்ள வேண்டும்: கனிமொழி எம்.பி.

ஆகஸ்டு 11, 2019 07:05

தூத்துக்குடி: பெண்கள் தங்களது தன்னம் பிக்கையை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்று கனிமொழி எம்.பி. தெரிவித்தார்.

தூத்துக்குடி தூய மரியன்னை கல்லூரியின் சமூக மேம்பாட்டு திட்டம் சார்பில் ஆண்டு தோறும் ஒரு கிராமத்தை தத்தெடுத்து அங்குள்ள மகளிர் மற்றும் மாணவர்களுக்கு மேம்பாட்டு பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகிறது. அதுபோல் இந்தாண்டு தருவைகுளம் கிராமத்தில் உள்ள பெண்கள் மற்றும் மாணவர்களுக்கான சூழல் மேம்பாட்டு முகாம், நேற்று காலையில் தருவைகுளம் புனித கத்தரீன் பெண்கள் தொடக்கப்பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.

தூய மரியன்னை கல்லூரி குழந்தை தெரஸ் வரவேற்றார். கல்லூரி முதல்வர் லூசியா ரோஸ் தலைமை வகித்தார். நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக தூத்துக்குடி எம்பி கனிமொழி கலந்து கொண்டு பேசியதாவது:

பல ஆண்டுகளுக்கு முன்பு பெண் கல்வி என்பது நினைக்க முடியாத ஒன்றாக இருந்தது. இந்த சமூக சூழலை மாற்றி அனைவரும் கல்வி பயிலவேண்டும். பெண்கள் கல்வி அறிவு பெற வேண்டும் என்று போராடி பெற்று தந்தவர்கள் பெரியார் மற்றும் திராவிட கழகத்தினர். பெண்கள் வேலைக்கு செல்வதன் மூலம் அவர்களின் வாழ்க்கையில் முக்கிய முடிவுகளை அவர்களே எடுக்கும் நிலை உருவாகி உள்ளது.

பெண்களால் அனைத்தையும் செய்ய முடியும். சில நாட்களுக்கு முன்பு விண்ணில் செலுத்தப்பட்ட சந்திரயான்-2 தலைமை பணியில் இருந்தவர்களில் 2 பேர் பெண்கள். எனவே பெண்கள் தங்களது தன்னம்பிக்கையை வளர்த்து கொள்ள வேண்டும் என்றார் அவர்.தொடர்ந்து, மகளிர் மற்றும் மாணவர்களுக்கு நடத்தப்படும் சணல் கைவினை பொருட்கள் தயாரித்தல் பயிற்சி, தையல் பயிற்சி, ஆங்கில மொழி பயிற்சி, மாடி தோட்டம் அமைக்கும் பயிற்சியை அவர் தொடங்கி வைத்தார்.

பின்னர் தருவைகுளம் உயர்நிலைப்பள்ளிக்கு சென்று மாணவர்களுடன் கலந்துரை யாடினார். அப்போது, மாணவர்கள் விடுத்த கோரிக்கையை ஏற்று பள்ளிக்கு கலையரங்கம் கட்டித்தர ஏற்பாடு செய்வதாக அவர் உறுதி அளித்தார். நிகழ்ச்சியில், சண்முகையா எம்எல்ஏ, மாநில திமுக மாணவர் அணி துணை செயலாளர் உமரி சங்கர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். முன்னதாக அந்த பகுதி மக்களிடம் கோரிக்கை மனுக்களை அவர் பெற்றுக் கொண்டார்.

தலைப்புச்செய்திகள்