Monday, 24th June 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

கபடியால் பறிபோனது உயிர்

ஆகஸ்டு 11, 2019 01:27

சென்னை : சென்னை அடுத்த குன்றத்தூரில் முன்விரோதம் காரணமாக ஜாமினில் வெளியே வந்த இளைஞர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் 4 பேர் கைது செய்யப்பட்டனர்.

சென்னை பழந்தண்டலம் பிள்ளையார் கோவில் தெருவைச் சேர்ந்தவர் இளைஞர் அருள். சில நாட்களுக்கு முன்பு நடந்த கபடி போட்டியின் போது இவருக்கும், அதே பகுதியை சேர்ந்த ஒரு தரப்புக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. 

இதனால் அருளை அந்த கும்பல் சுற்றி வளைத்து அரிவாளால் சரமாரியாக வெட்டியது. இதில் பலத்த வெட்டுக் காயங்கள் அடைந்த அருள் உயிரிழந்தார். கொலை தொடர்பாக அதே பகுதியை சேர்ந்த நிஷாந்த், வெங்கட்ராமன், விஜய், சதீஷ்குமார் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். டில்லிபாபு என்பவரை போலீசார் தேடி வருகின்றனர்.

தலைப்புச்செய்திகள்