Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

டில்லி செங்கோட்டையில் பலத்த பாதுகாப்பு

ஆகஸ்டு 12, 2019 06:15

புதுடில்லி : சுதந்திர தின கொண்டாட்டங்களை சீர்குலைப்பதற்காக டில்லி செங்கோட்டை அருகே தாக்குதல் நடத்த பயங்கரவாதிகள் திட்டமிட்டிருப்பதாக இந்திய பாதுகாப்பு கழகம் டில்லி போலீசை எச்சரித்துள்ளது.

செங்கோட்டை அருகே குண்டுவெடிப்பு தாக்குதலை நடத்த பயங்கரவாதிகள் திட்டமிட்டிருப்பதாக வந்த தகவலை அடுத்து டில்லியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. போலீஸ் அல்லது ராணுவ உடையணிந்து வந்து, அரசு வாகனங்களை பயன்படுத்தி இந்த தாக்குதலை நடத்த பயங்கரவாதிகள் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

ஆப்கானிஸ்தான் பாஸ்போர்டை பயன்படுத்தி பயங்கரவாதிகள் இந்தியாவிற்கு வரக்கூடும். டில்லி, காசியாபாத், லக்னோ உள்ளிட்ட பகுதிகளில் உள்ள பல்வேறு சமூகத்தினரிடையே பதற்றத்தையும், கலவரத்தையும் ஏற்படுத்துவதே அவர்களின் நோக்கம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதனால் டில்லி எல்லைப் பகுதிகள், பஸ் நிலையங்கள் ஆகியவற்றில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

டில்லி மட்டுமின்றி பெங்களூருவிலும் விவிஐபி.,க்கள் மற்றும் சாதாரண மக்களை குறிவைத்து அவர்கள் தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளனர். இந்தியாவில் பயங்கரவாத தாக்குதல்களை நடத்த ஐஎஸ்ஐ நிதி உதவி செய்து வருகிறது. முக்கிய நகரங்கள் பலவும் உஷார்படுத்தப்பட்டுள்ளதாகவும், 1500 க்கும் அதிகமான சிசிடிவி கேமிராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
 

தலைப்புச்செய்திகள்