Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

நடிகர் ரஜினிகாந்த் பேச்சிற்கு சீமான் கருத்து

ஆகஸ்டு 12, 2019 07:05

திருநெல்வேலி: ரஜினிகாந்த் நல்ல மனிதராகவும், அரசியல் தலைவராகவும் இருக்க வேண்டும் என, நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கருத்து தெரிவித்துள்ளார். 

திருநெல்வேலியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், உள்ளாட்சி தேர்தல் நடத்தப்பட்டால், நாம் தமிழர் கட்சி போட்டியிட தயாராக இருப்பதாக தெரிவித்தார். 

காஷ்மீர் விவகாரம் தொடர்பாக, நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்த கருத்து குறித்து, செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, அவதாரங்களாக இருப்பதில் தவறில்லை என்றும், அதற்கு முன் நல்ல மனிதராகவும், தலைவராகவும் இருக்க வேண்டும், எனவும் சீமான் கூறினார்.

தலைப்புச்செய்திகள்