Sunday, 7th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

3-வது முறையாக‘முத்தலாக்’ தடை அவசர சட்டம் பிரகடனம்

பிப்ரவரி 22, 2019 06:41

புதுடெல்லி: முத்தலாக் முறையை தண்டனைக்குரிய குற்றமாக கருதுவதற்கான அவசர சட்டம் நேற்று மீண்டும் பிறப்பிக்கப்பட்டது. உடனுக்குடன் ‘முத்தலாக்’ சொல்லி விவாகரத்து செய்வதை தண்டனைக்குரிய குற்றமாக கருதும் மசோதா, நாடாளுமன்ற மக்களவையில் நிறைவேற்றப்பட்டது.  

மாநிலங்களவையில் அம்மசோதா நிறைவேற்றப்படாமல், நிலுவையில் உள்ளது. இரு அவைகளிலும் நிறைவேறினால்தான், மசோதா சட்டவடிவம் பெறும். அதற்கு வாய்ப்பு இல்லாததால், முத்தலாக் முறையை தண்டனைக்குரிய குற்றமாக கருதுவதற்கான அவசர சட்டம் நேற்று மீண்டும் பிறப்பிக்கப்பட்டது. இது, 3-வது முறையாக பிரகடனம் செய்யப்படுகிறது. 

கடந்த 19-ந் தேதி, இந்த முடிவுக்கு மத்திய மந்திரிசபை ஒப்புதல் அளித்தது. ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், கையெழுத்திட்டதை தொடர்ந்து, நேற்று அவசர சட்டம் பிறப்பிக்கப்பட்டது. 
 

தலைப்புச்செய்திகள்