Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

உள்ளாட்சி தேர்தலுக்காக இறுதி வாக்குச்சாவடிகள் பட்டியலை வெளியிட்ட உள்ளாட்சி அமைப்புகள்

ஆகஸ்டு 12, 2019 02:23

சென்னை: உள்ளாட்சி தேர்தலுக்காக தமிழகம் முழுவதும் 92 ஆயிரம் வாக்குச்சாவடிகள் கண்டறியப்பட்டு இறுதி செய்யப்பட்டுள்ளன.

உள்ளாட்சி தேர்தல் நடத்துவதற்கான மாநில மற்றும் மாவட்ட தேர்தல் அலுவலர்கள் கடந்த மாதம் நியமிக்கப்பட்டனர். தொடர்ந்து உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்காளர் பட்டியல் தயாரிக்கும் பணிகளும் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. பணிகள் நிறைவடைந்ததும் அக்டோபர் மாதத்தில் வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும் என தகவல்கள் வெளியானது.

இதற்காக வாக்குச்சாவடிகள் கண்டறியப்பட்டு வரைவு வாக்குச்சாவடி பட்டியல் வெளியிடப்பட்ட நிலையில், பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டு கருத்துகள் கேட்கப்பட்டதோடு அனைத்து கட்சி ஆலோசனை கூட்டமும் நடைபெற்றது. இந்நிலையில் உள்ளாட்சி அமைப்புகள் அனைத்தும் தற்போது இறுதி வாக்குச்சாவடி பட்டியலை வெளியிட்டுள்ளன.

அதன்படி சென்னை உள்ளிட்ட 15 மாநகராட்சிகளில் 12 ஆயிரத்து 679 வாக்குச்சாவடிகள் இறுதி செய்யப்பட்டுள்ளன. 121 நகராட்சிகளில் 7 ஆயிரத்து 386 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.

528 பேரூராட்சிகளில் 9 ஆயிரத்து 288 வாக்குச்சாவடிகளும், 12 ஆயிரத்து 524 கிராம ஊராட்சிகளில் 63 ஆயிரத்து 418 வாக்குச்சாவடிகளும் இறுதி செய்யப்பட்டுள்ளன. தமிழகம் முழுவதும் மொத்தமாக 92 ஆயிரத்து 771 வாக்குச்சாவடிகள் இறுதி செய்யப்பட்டுள்ளன.

தலைப்புச்செய்திகள்