Sunday, 30th June 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

பெரியாரை பற்றி பேசினால் தேசத்துரோகி என்பதா?- நடிகர் சத்யராஜ்

ஆகஸ்டு 13, 2019 04:55

சென்னை: பெரியாரை பற்றி பேசினால் தேசத்துரோகி என்பதா என திருக்குறள் மாநாட்டில் நடிகர் சத்யராஜ் பேசியுள்ளார். பெரியாரிய உணர்வாளர்களின் கூட்டமைப்பின் சார்பாக சென்னை தேனாம்பேட்டை காமராஜர் அரங்கில் திருக்குறள் மாநாடு நேற்று நடைபெற்றது.

இதில், திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி, நடிகர் சத்யராஜ், மதிமுக பொதுச் செயலாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான வைகோ, விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன் எம்பி, ஜவாஹிருல்லா, தெகலான் பாகவி, சுப வீரபாண்டியன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். 

நிகழ்ச்சியில் பேசிய நடிகர் சத்யராஜ், பெரியாரிய கருத்துகளை பற்றி பேசினால் ஆண்டி இந்தியன் என்று சிலர் சொல்வதாக விமர்சித்தார். திருவள்ளுவரையும், தந்தை பெரியாரையும் ஒரு மனநல மருத்துவர்களாகத் தான் பார்ப்பதாக கூறினார்.

தலைப்புச்செய்திகள்