Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

மதுபான ஆலைகளின் கணக்கில் காட்டப்படாத ஆயிரத்து 120 கோடி ரூபாய்

ஆகஸ்டு 13, 2019 06:12

சென்னை: மதுபான ஆலைகளில் நடத்தப்பட்ட சோதனையில் ஆயிரத்து 120 கோடி ரூபாய் கணக்கில் காட்டாத வருவாயை வருமானவரித்துறையினர் கண்டுபிடித்துள்ளனர். எஸ்.என்.ஜே குழுமம் என்ற தனியார் மதுபான நிறுவனத்துக்கு சொந்தமான 55 இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். இதில் 4 கோடியே 80 லட்சம் ரூபாய் பணம் காரில் இருந்து பறிமுதல் செய்யப்பட்டது.

டாஸ்மாக் நிறுவனத்திற்கு மதுபானங்கள் சப்ளை செய்யும் இந்த இரண்டு தனியார் மதுபான நிறுவனங்களும், மதுபான தயாரிப்புக்குத் தேவையான மூலப் பொருட்கள் வாங்கியதில் தவறாக கணக்கு காட்டி கோடிக்கணக்கான ரூபாய் கருப்பு பணமாக மாற்றி உள்ளதாகவும், வருமானவரி சோதனையில் தெரியவந்துள்ளது.

இரண்டு மதுபான நிறுவனங்களிலும் நடத்தப்பட்ட சோதனையில் ஆயிரத்து 120 கோடி ரூபாய் அளவிலான கணக்கில் காட்டப்படாத வருவாய் சிக்கி இருக்கின்றன. இதில் 450 கோடி ரூபாய் கணக்கில் காட்டாத வருவாயை வைத்திருந்ததாக நிறுவனங்கள் ஒப்புக் கொண்டுள்ளன.

இந்த இரு நிறுவனங்களுக்கு சொந்தமான 30 வங்கி கணக்குகளையும் வருமானவரித்துறை முடக்கியுள்ளது. தொடர்ந்து டாஸ்மாக் நிறுவனத்திற்கு மதுபானம் சப்ளை செய்த விவகாரத்தில் எந்த மாதிரியான மோசடியில் ஈடுபட்டு உள்ளார்கள் என்பது குறித்தும் வருமான வரி துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த இரு மதுபான நிறுவனங்களின் உரிமையாளர்கள் மற்றும் நிர்வாகிகளுக்கு சம்மன் அனுப்பப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.

தலைப்புச்செய்திகள்