Friday, 5th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

மோடி, அமித்ஷா குறித்து டுவிட்டரில் அவதூறு

ஆகஸ்டு 14, 2019 05:28

புதுடில்லி: பிரதமர் மோடி, அமித்ஷா குறித்து பிரபல பாடகி ஹார்ட் கவுர் அவதூறு வீடியோவை டுவிட்டரில் பதிவேற்றிய புகாரில் அவரது டுவிட்டர் கணக்கு சஸ்பெண்ட் செய்யப்பட்டது.

பஞ்சாப்பை சேர்ந்த பிரபல ராப் பாடகி ஹார்ட் கவுர், சமூக வலைதளம் மூலம் அரசியல் பிரபலங்களை விமர்சித்து பெயர் பெற்றவர். ஏற்கனவே உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத், ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் மோகன் பாகவத் ஆகியோர் குறித்து அவதூறு பரப்பி சர்ச்சையில் சிக்கியுள்ளார். பஞ்சாப்பை தனிநாடாக பிரகடனப்படுத்தி வரும் காலிஸ்தான் பயங்கரவாதிகளின் ஆதரவாளராவார்.

இந்நிலையில் ஹார்ட் கவுர் தனது டுவிட்டர் கணக்கில் பிரதமர் மோடி, மத்திய அமைச்சர் அமித்ஷா குறித்து அவதூறு வீடியோவை வெளியிட்டு சர்ச்சையில் சிக்கியுள்ளார். 2. 20 நிமிட வீடியோ பின்னணியில் காலிஸ்தான் பயங்கரவாதிகள் உள்ளது தெரியவந்துள்ளது. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவியதையடுத்து அவரது டுவிட்டர் கணக்கு சஸ்பெண்ட் செய்யப்பட்டது.

தலைப்புச்செய்திகள்