Monday, 24th June 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

சீனாவில் தங்கம் வென்று சாதித்த தமிழக பெண் காவலர்

ஆகஸ்டு 15, 2019 07:05

சென்னை: சீனாவில் நடந்துவரும் உலக காவலர்கள் மற்றும் தீயணைப்பு துறையினருக்கான விளையாட்டுப் போட்டியில், தமிழக காவல்துறையில் காவலராக உள்ள கிருஷ்ணரேகா உயரம் தாண்டுதலில் தங்கம் வென்றுள்ளார்.

சீனாவின் செங்க்டூ நகரில் உலக காவலர்கள் மற்றும் தீயணைப்பு துறையினருக்கான விளையாட்டு போட்டி கடந்த 9-ம் தேதி கோலாகலமாக தொடங்கியது. மக்களுக்காக உயிரை பணையம் வைத்து இரவு, பகல் பணியாற்றும் காவலர்கள் மற்றும் தீயணைப்பு துறையினர்களை மகிழ்ச்சிப்படுத்தும் விதமாக கடந்த 1985ம் ஆண்டு முதல் இந்த விளையாட்டுப் போட்டி நடத்தப்பட்டுவருகிறது.

இதில் உலக நாடுகளை சேர்ந்த காவல்துறையினர் மற்றும் தீயணைப்பு துறையினர் கலந்து கொள்வர். இந்த விளையாட்டு போட்டியில் 79 நாடுகளை சேர்ந்த 10,000 வீரர்கள் பங்கேற்றுள்ள நிலையில், குத்துச்சண்டை, டார்ட்ஸ் உள்பட 60 விளையாட்டு போட்டிகள் நடத்தப்படவுள்ளன. இதில் பணியிலிருக்கும் காவலர்கள் மட்டுமல்லாது, ஓய்வுபெற்ற காவலர்கள் மற்றும் தீயணைப்பு துறையினரும் கலந்துக்கொள்ளலாம்.

இந்நிலையில், உயரம் தாண்டுதல் போட்டியில் தமிழக பெண் காவலர் கிருஷ்ண ரேகா தங்கப்பதக்கம் வென்றுள்ளார். இவர் கன்னியாகுமரி மாவட்டம் மணவாளக்குறிச்சி காவல்நிலையத்தில் பெண் காவலராக பணியாற்றுகிறார். கிருஷ்ண ரேகாவுக்கு உயர் அதிகாரிகள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

தலைப்புச்செய்திகள்