Friday, 5th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

வேலூர் மாவட்டம் மூன்றாக பிரிக்கப்படும்: முதலமைச்சர் அறிவிப்பு

ஆகஸ்டு 15, 2019 07:49

சென்னை: சுதந்திர தினத்தை முன்னிட்டு சென்னை கோட்டை கொத்தளத்தில் தேசியக் கொடியை முதலமைச்சர் ஏற்றி வைத்தார். வேலூர் மாவட்டத்தை மூன்றாக பிரித்து ராணிப்பேட்டை மற்றும் திருப்பத்தூர் மாவட்டங்கள் உருவாக்கப்படும் என்று அப்போது அவர் கூறினார்.

நாட்டின் 73-வது சுதந்திர தினம் இன்று நாடு முழுவதும் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. சுதந்திரதினத்தை முன்னிட்டு சென்னை கோட்டை கொத்தளத்துக்கு வந்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு, தலைமைச் செயலர் முப்படை அதிகாரிகளை அறிமுகம் செய்து வைத்தார்.

அதனைத் தொடர்ந்து காவல்துறையினரின் அணிவகுப்பு மரியாதையையும் முதலமைச்சர் ஏற்றுக்கொண்டார்.

பின்னர் கோட்டை கொத்தளத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தேசியக் கொடியை ஏற்றி வைத்தார்.

பின்னர் உரையாற்றிய முதலமைச்சர் நிர்வாக வசதிக்காக வேலூர் மாவட்டம் மூன்றாக பிரிக்கப்படும் என்றும் ராணிப்பேட்டை, திருப்பத்தூர் மாவட்டங்கள் புதிதாக உருவாக்கப்படும் என்றும் முதலமைச்சர் அறிவித்தார்.

இருமொழிக் கொள்கையில் தமிழக அரசு உறுதியாக உள்ளதாகத் தெரிவித்த அவர், மக்களை பாதிக்கக்கூடிய எந்த திட்டமாக இருந்தாலும் அரசு அதனை எதிர்த்து மக்கள் நலனை பாதுகாக்கும் என்றார்.
 

தலைப்புச்செய்திகள்