Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

செங்கத்தில் திருட்டு மணல் அள்ளியவர்களை மடக்கிப் பிடித்தார் செங்கம் வட்டாட்சியர்

ஆகஸ்டு 15, 2019 10:19

திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் கந்தசாமி ஆலோசனையின்படி செங்கம பகுதியில் உள்ள ஏரியை தூர் வாரி விவசாய நிலத்திற்கு மட்டும் பயன்படுத்த வேண்டும் என்பது நிபந்தனை. அதன்படி சிங்கம் ஏரியை தூர்வாரும் பணி நடைபெற்று வருகிறது, 

ஆனால் மணலை விவசாய நிலத்திற்கு பயன்படுத்தாமல்  வீட்டுமனைகளுக்கு அதிக விலைக்கு சட்டவிரோதமாக விற்பனை செய்து வந்தனர் , வியாழன் காலை 11 மணி அளவில்  செங்கம் வட்டாட்சியர் பார்த்தசாரதி ரோந்து  பணியில் ஈடுபட்ட்டார்.

அப்பொழுது ஏரியில் உள்ள மண்ணை விவசாய நிலத்திற்கு பயன்படுத்தாமல் s.v மஹால் பின்புறம் உள்ள வீட்டுமனைகளுக்கு சென்று கொண்டிருந்த டிப்பர் லாரியை மணலை கொட்டும்போது செங்கம் வட்டாட்சியர்  பார்த்தசாரதி  மற்றும் குழுவினர் மடக்கிப் பிடித்த டிப்பர் லாரியை செங்கம் காவல்நிலையத்தில் ஒப்படைத்து மற்றும் காவல்நிலையத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது.

தலைப்புச்செய்திகள்