Monday, 1st July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

20 ஆண்டுகளாக மோடிக்கு ராக்கி கட்டும் பாக்., பெண்

ஆகஸ்டு 15, 2019 12:33

புதுடில்லி: பிரதமர் மோடிக்கு 20 ஆண்டுக்கும் மேலாக 'ரக் ஷா பந்தன்' பண்டிகையை முன்னிட்டு, பாகிஸ்தானை சேர்ந்த கமர் மோஷின் ஷேக் என்ற பெண் ராக்கி கயிறு கட்டி வருகிறார். இந்த ஆண்டும் ராக்கி கயிறு கட்டிய அவர், மோடியின் வெற்றிக்கும், உடல் நலத்திற்கும் பிரார்த்தனை செய்வதாக கூறினார்.

பாகிஸ்தானை சேர்ந்தவர் கமர் மோஷின் ஷேக். இந்தியாவை சேர்ந்தவரை திருமணம் செய்து கொண்டு குஜராத் மாநிலம் ஆமதாபாத்தில் வசித்து வருகிறார். திருமணத்திற்கு பின்னர், ஓவியரான அவரது கணவருடன், ஒரு முறை டில்லி சென்றார். அப்போது, ஆர்எஸ்எஸ் உறுப்பினராக இருந்த, பிரதமர் மோடியை, சந்தித்துள்ளார். 

அது முதல், 20 ஆண்டுகளுக்கும் மேலாக, சகோதரத்துவத்தை வலியுறுத்தும் 'ரக் ஷா பந்தன்' பண்டிகையை முன்னிட்டு, மோடிக்கு, ராக்கி கயிறு கட்டுவதை கமர் மோஷின் ஷேக் வழக்கமாக வைத்துள்ளார். அதுபோல், இந்த ஆண்டும் பிரதமர் மோடியை சந்தித்து, ராக்கி கயிறு கட்டியதுடன், ஓவியம் ஒன்றை பரிசாக கொடுத்தார்.

ராக்கி கயிறு கட்டியது தொடர்பாக கமர் மோஷின் ஷேக் கூறியதாவது: ஒவ்வொரு ஆண்டும், எனது மூத்த சகோதரருக்கு ராக்கி கயிறு கட்ட வாய்ப்பு கிடைப்பது மகிழ்ச்சியாக உள்ளது. அவர் எடுத்த நேர்மறையான முடிவுகளை, உலகம் அங்கீகரிக்கும் வகையில், அடுத்த ஐந்து ஆண்டுகள் அவருக்கு மிகவும் சிறப்பாக இருக்க வேண்டும் என்று நான் பிரார்த்திக்கிறேன். அவர், நல்ல உடல்ஆரோக்கியத்துடன் வாழ பிரார்த்தனை செய்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.
 

தலைப்புச்செய்திகள்