Monday, 1st July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

முப்படைகளின் முதல் தலைவராகிறாரா பிபின் ராவத்?

ஆகஸ்டு 15, 2019 01:26

புதுடெல்லி: பிரதமர் நரேந்திர மோடி இன்று ஆற்றிய 73வது சுதந்திர தின விழாவில், ஒற்றைத் தளபதியின் (chief of defence staff - CDS) கீழ் ராணுவம், கடற்படை, விமானப்படை ஆகிய முப்படைகள் ஒருங்கிணைக்கப்படும் என்று அறிவித்தார். இது பாதுகாப்புப் படைகளின் மிகப்பெரும் சீர்த்திருத்த நடவடிக்கையாக பார்க்கப்படுகிறது.

ராணுவ, கடற்படை, விமானப்படை தளபதிகளை விட ஒற்றைத் தளபதியின் (CDS) ரேங்க் மதிப்புமிக்கதாக இருக்கும். இது 5 நட்சத்திர ஜெனரல் ரேங்க் கொண்டதாகும். முதல் முறையாக ஏற்படுத்தப்பட இருக்கும் இந்த உயர் பதவிக்கு, தற்போதைய ராணுவத் தலைமை தளபதியான பிபின் ராவத் பெயர் அடிபடுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

நீண்டகாலமாகவே பாதுகாப்புத்துறையில் சீர்த்திருத்த நடவடிக்கை பரிசீலனையில் இருந்து வருகிறது. பல முறை இதற்கான ஆய்வறிக்கைகளும் சமர்ப்பிக்கப்பட்டது. நமது படைகள் ஒருமித்தமாக நகர வேண்டியுள்ளது. இவை ஒன்றுக்கொன்று பின் தங்கியிருக்கக் கூடாது. முப்படைகளையும் ஒருங்கிணைத்து ஒற்றைத் தளபதியின் கீழ் இயங்கச் செய்வதன் மூலம் முப்படைகளுக்குள் ஒருங்கிணைப்பு ஏற்படும் என்று சுதந்திர தின விழாவில் பிரதமர் நரேந்திர மோடி பேசினார் என்பது குறிப்பிடத்தக்கது.
 

தலைப்புச்செய்திகள்