Saturday, 28th September 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

வாஜ்பாய் நினைவிடத்தில் ஜனாதிபதி, பிரதமர் மரியாதை

ஆகஸ்டு 16, 2019 04:50

புதுடெல்லி: முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் முதலாமாண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. அவரது நினைவிடத்தில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை மந்திரி அமித் ஷா, பாஜக தேசிய செயல் தலைவர் ஜே.பி.நட்டா மற்றும் பல்வேறு தலைவர்கள் மரியாதை செலுத்தினர்.

நினைவஞ்சலி நிகழ்ச்சியில் வாஜ்பாயின் மகள் நமிதா கவுல் பட்டாச்சார்யா மற்றும் பேத்தி நிகாரிகா ஆகியோரும் பங்கேற்றனர். 
இதேபோல் பாஜக அலுவலகங்களில் வாஜ்பாயின் திருவுருவப்படம் அலங்கரிக்கப்பட்டு, மரியாதை செலுத்தப்படுகிறது.
 
வாஜ்பாயின் பிறந்தநாளான டிசம்பர் 25-ம்தேதி நல்லாட்சி தினமாக பாஜக சார்பில் கொண்டாடப்படுகிறது. மூன்று முறை நாட்டின் பிரதமர் பதவியை அலங்கரித்த அவருக்கு கடந்த 2014ம் ஆண்டு பாரத ரத்னா விருது வழங்கி மத்திய அரசு கவுரவித்தது குறிப்பிடத்தக்கது. 

நடிகை வினோதினி அ.ம.மு.க.வில் இணைந்தார்

சென்னை: விசு இயக்கத்தில், எஸ்.வி. சேகர் நடித்த, மணல் கயிறு படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் வினோதினி. ‘வண்ண வண்ண பூக்கள்’ படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். தமிழ், கன்னடம், மலையாளம் போன்ற மொழிகளில் நடித்துள்ளார். 40-க்கும் மேற்பட்ட படங்களிலும், சித்தி உள்ளிட்ட 15-க்கும் மேற்பட்ட டி.வி. தொடர்களிலும் நடித்துள்ளார்.

சீரியல்களில் நடிப்பை தொடர்ந்து வந்ததோடு தனது கணவர் குழந்தைகளுடன் சென்னையில் வசித்து வந்த அவர், தற்போது அ.ம.மு.க.வில் இணைந்துள்ளார். அ.ம.மு.க. உறுப்பினரும், நடிகருமான ரஞ்சித் வினோதினியை அ.ம.மு.க.வில் இணைத்துள்ளார்.

இதுதொடர்பான புகைப்படத்தை டிடிவி தினகரன் தனது முகநூல் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். முன்னதாக வினோதினி அதிமுகவில் உறுப்பினராக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

தலைப்புச்செய்திகள்