Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

ஆந்திராவில் 59 லட்சம் போலி வாக்காளர்கள்

பிப்ரவரி 22, 2019 08:22

அமராவதி : ஆந்திராவில் 59 லட்சத்திற்கும் அதிகமான போலி வாக்காளர்கள் இருப்பதாக ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் குற்றம்சாட்டி இருந்தது. இதனையடுத்து தேர்தல் கமிஷன் அதிகாரிகள் அடங்கிய குழு, இன்று ஆந்திராவிற்கு நேரில் சென்று, வாக்காளர் பட்டியலை சரிபார்த்து வருகிறது. 

ஆந்திராவில் மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கை 3.69 கோடி. வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றுள்ள 59 லட்சத்திற்கும் அதிகமான (16 சதவீதம்) பெயர்கள் செல்லாதவை அல்லது போலியானவை என நேற்று செய்தியாளர் சந்தில் பேசிய ஒய்.எஸ்ஆர்.காங்., தெரிவித்தது.  
தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்பதற்காக ஆட்சி அதிகாரத்தை பயன்படுத்தி தெலுங்கு தேசம் கட்சி இந்த போலி வாக்காளர்களை சேர்த்துள்ளதாகவும் குற்றம்சாட்டியது. 

அத்துடன் 12 பிரிவுகளின் கீழ் 59,18,631 போலி வாக்காளர்கள், வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளதை ஒய்.எஸ்ஆர்.காங்., காட்டி இருந்தது. 2018 செப்டம்பர் கணக்கெடுப்பின்படி வாக்காளர்கள் எண்ணிக்கை 52.7 லட்சம் மட்டுமே. ஆனால் ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் 20 லட்சத்திற்கும் அதிகமான ஓட்டுக்கள் கூடுதலாக பதிவாகி உள்ளதாகவும் கூறப்பட்டது. 

இது தொடர்பாக பிப்.,4 அன்று தலைமை தேர்தல் கமிஷனரை சந்தித்த ஒய்.எஸ்.ஆர்.காங்., தலைவர் ஜெகன் மோகன் ரெட்டி, வாக்காளர் பட்டியலை சரிபார்த்து, நேர்மையான முறையில் ரேத்தல் நடக்க வழிவகை செய்ய வேண்டும் என கேட்டுக் கொண்டார். இது தொடர்பாக கோர்ட்டிலும் பொதுநல வழக்கு தொடரப்பட்டுள்ளது . இதனையடுத்து 10 பேர் கொண்ட தேர்தல் அதிகாரிகள் குழு ஆந்திரா வந்து, வாக்காளர் பட்டியலை சரிபார்த்து வருகிறது. 
 

தலைப்புச்செய்திகள்